உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. பெறும் சைவசமயக் குரவர் தோன்றிய திருவாமூர். "இந்தியாவின் முதல் சத்தியாகிரகி, அப்பர் பெருமான் தான்” என்று ஓமந்தூரார் அடிக்கடி பெருமிதத்துடன் கூறுவார். கல்வி ஓ.பி.ஆர்.எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக் கிறார். ஆனால், அக்காலத்து எட்டாம் வகுப்புப் படிப்புக்கும் இன்றைய எட்டாம் வகுப்புப் படிப்புக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. இதை விவரித்தால் சிலர் மனம் புண்படக்கூடும். தன்னுடைய அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாக இருந்ததால் ஓ.பி.ஆர். தமிழிலும் ஆங்கிலத் திலும் ஓரளவு நல்ல புலமை பெற்றிருந்தார். இயல்பாகவே தெலுங்கும் தெரிந்து கொண்டிருந்தார். இசை முதலிய துறை களில் இவருக்கு நல்ல ஆர்வம் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்தபின்னருங்கூட இவர் படித்த வண்ண:மாகவே இருந்தார். 'சாந்துணையும் கல்லாதவாறு' என்ற திருக்குறளுக்கு இலக்கியமாக ஓ. பி. ஆர். திகழ்ந்தார். தமது 70-ஆவது வயதில் இவர் சமஸ்கிருதத்தைக் கற்றுக்கொண்டதே இதற்குச் சான்று பகரும். கல்வி, கேள்வி, என்ற இருவகையாலும் இவர் தமது அறிவை வளர்த்துக் கொண்டார். ஏராளமான நூல்களை ஓ.பி.ஆர். படித்தார். இவருடைய நாட்குறிப்பில் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் பக்கம் பக்கமாக எழுதப்பட்டிருக்கிறது. பலவகை நூல்களைப் படிக்கும் பழக்கம் ஓ. பி. ஆரிடம் இருந்ததை அறிந்த ஆங்கிலேய கவர்னர் சர். ஆர்ச்சிபால்டு நை, தாம் இங்கிலாந் நுக்குத் திரும்பிப் போன பிறகு அங்கிருந்து சில ஆண்டுகள்வரை இவருக்கு ஏராளமான நூல்களை அனுப்பிய வண்ணமாக இருந்தார். தனக்குப் பயனுள்ள அல்லது ஈடுபாடுள்ள துறைகளில் வெளிவரும் பத்திரிகைகளுக்குச் சந்தாக் கட்டவும் ஓ.பி.ஆர். தயங்கமாட்டார். எத்தனையோ பத்திரிகைகளுக்கு ஆயுள் சந்தாக் கட்டினார். அது அவருடைய ஆயுளுக்குச் சந்தாவாக இல்லாமல் அந்தப் பத்திரிகைகளின் அற்ப ஆயுளுக்கே சந்தாவாக முடிந்தது. 16