“மிக நன்றாகப் படித்தார். துணைக் கேள்விகளுக்கும் ஆங்கிலத்திலேயே உடனுக்குடன் பதில் சொல்லுவதில் மாண்புமிகு பிரதம மந்திரி அவர்களுக்கு எவ்விதமான சிரமமும் இராது என்பது என் கருத்து' மகன் ஓ.பி.ஆருடைய ஒரே மகன் சுந்தரம் என்பவன். அவன் இளமையிலேயே தாயாரை இழந்துவிட்ட காரணத்தால் குருகுலக் கல்வியே அவனுக்கு ஏற்றது என்று கருதி, ஓ.பி.ஆர். அவனை திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ. வே. சு. ஐயர் நடத்திய குருகுலத்தில் படிக்க வைத்தார். அந்தக் குருகுலத்தில் பிராமணப் பிள்ளைகளுக்குத் தனியாகவும் ஏனைய சாதிப் பிள்ளை களுக்குத் தனியாகவும் உணவு படைக்கப்பட்டது. பெரியார் ஈ.வே.ரா . காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிக் கொண்டதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான காரணமாகும். சேரன்மாதேவி குருகுலத்திற்கு நிதி உதவ வாக்களித்திருந்த பலரும் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில், ஓ.பி.ஆர். தன் மகனை அங்கிருந்து வரவழைத்துக் கொண்டார். சுதந்திரப் போராட்ட வீரரும் விழுப்புரம் ஊரினருமான திரு ஜி.ஆதிநாராயணா, ஓ. பி. ஆர். மகன் சுந்தரத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்: "1927-ஆம் ஆண்டு நீலனுடைய சத்தியாக்கிரக இயக்கம் சென்னையில் நடந்துகொண்டிருந்தபோது அவரை ஓமந்தூரில் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் அடிக்கடி அரசியல் பிரச்சினைகளில் அவரைக் கலந்து பேசிவந்தேன். பிறகு பெங்களூருக்கு அடுத்துள்ள 'கெங்கேரி' கிராமத்தில் ஏற்படுத்தப்பட்ட 'ஆசிரமத்தில்' ஆசிரியராக பதவி ஏற்றேன். அதன் தலைவர் 'பிரம்மச் சாரி இராமச்சந்திரன்' என்பவர். அவரிடத்தில் உழைத்து வரும்போது ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் தன் மகன் சுந்தரத்தை அந்த ஆசிரமத்தில் படிக்கச் செய்தார். சுந்தரம் "நந்தி மலை”க்கு சுற்றுலாக் குழுவில் சேர்ந்து போய் இருந்தான். அதன் பிறகு அவனுக்கு உடம்பு ஜுரம் ஏற்பட்டு ஆசிரமத்திற்குத் திரும்பிய பிறகு, 19
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/40
Appearance