உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனை பெங்களூரில் உள்ள டாக்டர் ஸ்ரீ ராமராவ் என்பவரிடம் சிகிச்சைக்கு அழைத்துக்கொண்டு போனோம். அதில் பிரயோசனப்பட வில்லை. மூன்றாம் நாள் மகன் இறந்துவிட்டான். அச்செய்தியை ஓமந்தூராருக்கு (தந்தி யில்) அனுப்பினேன். தந்தி போய்ச்சேர்ந்த சமயம் ஓமந்தூரார், சென்னைக்குப் போயிருந்தபடியால் பெங்களூருக்கு உடனே வரமுடியவில்லை. அவருடைய மகனைத் தகனம் செய்ய முடிவு செய்தோம். அந்தச்சமயம் (கல்கி பத்திரிகையின் உரிமையாளர்) திரு. சதாசிவம் அவர்கள் பெங்களூர் நகரிலுள்ள கதர் வஸ்திராலயத்தில் மேலாளராக இருந்தார். அவர் உதவியைக் கொண்டு ஓமந்தூரார் மகனை மாலை ஆறுமணிக்குத் தகனம்செய்தேன். அவன் உடலுக்கு நெருப்பு ஊட்டும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. மறுநாள் காலை ஓமந்தூரார் தம்பி லெட்சுமிநாராயண ரெட்டியார் வந்தார். வழக்கப்படி பால் தெளித்த பிறகு பையனுடைய எலும்பை எடுத்துக் கொண்டு ஊருக்குப் போய்விட்டார்." மகன் சுந்தரத்தின் மரணம் எதிர்பாராத விதமாகவும் திடீரென்றும் நிகழ்ந்தது. குடும்ப பாசத்தை முற்றிலும் அறுத்துக் கொண்டு தேசியப் பணியில் தாம் வாழ்நாள் முழுவதும் ஈடுபட வேண்டும் என்பது இறைவனின் திருவுள்ளம் என்று ஓ. பி.ஆர். அந்தத் துயரத்தைத் தாங்கிக்கொண்டு தம் கடமைகளைச் செய்து வந்தார். செல்லமாக வளர்த்த மகனின் நினைவு என்றும் இருப்ப தற்காக அவன் படம் ஒன்றை எப்போதும் தன் அருகே வைத்திருந்தார். 20