உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஈதல் லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு" - -குறள். 3 விடுதலை இயக்கம் விடுதலை இயக்கம் பெற்ற தாயைப் போற்றிய ஓமந்தூரார், தாம் பிறந்த பொன்னாடான இந்தியாவையும் வழிபட்டார். இந்தியாவில் அரசியல் பாலகங்காதர திலகர், லாலாலஜபதிராய், சுரேந்திரநாத் பானர்ஜி முதலிய ஏராளமான தலைவர்களால் வளர்க்கப்பட்டு, மகாத்மா காந்தியடிகளுடைய ஒப்பற்ற தலைமையில் கிராமங்களிலும் பரவி கோடிக்கணக்கான மக்களை அதில் ஈடுபடச் செய்தது. அடிமைத் தளைகளை அறுத்து, சுதந்திரம் பெறவேண்டும் என்ற கருத்தை ஒவ்வொரு கிராமத்திலும் பரப்புவதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தியாகிகள் நூற்றுக்கணக்கில் உருவாயினர். இந்தத் தியாகிகள்தான் சுதந்திர இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமாக விளங்கினர்.