உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முது பெரும் கிழவர் என்ற அடைமொழியைப் பிற்காலத்தில் பெற்ற சி. விஜயராகவாச்சாரியார் என்று புகழ்பெற்ற வழக்கறிஞர் தலைமை தாங்கினார். தென் இந்தியாவிலிருந்து பிரதிநிதிகள் செல்லுவதற்கு வசதியாகச் சென்னையிலிருந்து தனி இரயில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. கீழ்க்கண்டவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு ஓமந்தூரார் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். 1. லெட்சுமிநாராயண ரெட்டியார் (ஓமந்தூராரின் தம்பி) 2. மேல் பாக்கம் சதாசிவ ரெட்டியார் 3. இடையானம் ரங்கா ரெட்டியார் 4. முலசூர் மாதவ ரெட்டியார் 5. கட்டளை முத்துக்குமரப்ப ரெட்டியார் நாகபுரி மாநாட்டு நிகழ்ச்சிகளைக் குறித்து ஓமந்தூர் ரெட்டியார் அங்கு வந்திருந்த பிரதிநிதிகளுடன் கலந்து பேசினார். மாநாடு முடிவடைந்த பிறகு காசிக்கும், கல்கத்தாவுக்கும் போய் அந்த நகர்களில் சில நாட்கள் தங்கிவிட்டு ராஜமகேந்திரபுரம் வழியாகச் சென்னைக்கு நண்பர்களுடன் திரும்பிவந்தார். அன்னை பெசன்ட் சந்திப்பு 1921 ஆம் ஆண்டில் கடலூரில் பிரம்மஞான சபை (தியாசபிகல் சொசைடி) மாநாடு நடைபெற்றது. டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையார் அந்த மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஓமந்தூரார் அங்கே சென்று அந்தச் சபையின் கருத்துக்களையும் கொள்கைகளையும் துருவி விசாரித்துக் கொண்டார். பெசன்ட் அம்மையாரைச் சந்தித்து அவருடன் உரையாடினார். விழுப்புரம் மாநாடு தென் ஆர்க்காடு மாவட்ட அரசியல் மாநாடு 1920 இல் முதல் தடவையாக நடைபெற்றது. நாகபுரி மாநாடு முடிந்து எல்லோரும் திரும்பி வீடுவந்து சேர்ந்திருந்த சமயம் அது. 26.