உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுப்புரத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டை மிகச் சிறப்பாக் நடத்திய பெருமை வெங்கந்தூர் கணபதி சாஸ்திரி, விழுப்புரம் வக்கீல் சிதம்பர ஐயர், ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், மஞ்சக் குப்பம் சுதர்சனம் நாயுடு, சிறுவந்தாடு தேவநாயகஐயா ஆகியோ ருக்கு உரியது. மாநாட்டுக்குச் செலவுக்குப் பணம் வசூல் செய்யும் பொறுப்பைப் பெரும்பகுதி ஓமந்தூராரே ஏற்றுக்கொண்டார். திருமதி அசலாம்பிகை அம்மாள், அனுமந்தராவ், கிருஷ்ண சாமிசர்மா, 'ஹிந்து' நாளிதழின் ஆசிரியர் ரெங்கசாமி ஐயங்கார் முதலியவர்கள் கலந்துகொண்டு இந்த மாநாடு வெற்றிபெறச் செய்தனர். இந்த மாநாட்டால் தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் அதன்சுற்றுப் புறங்களிலும் ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. திண்டிவனத்தில் தெருவெல்லாம் தேசிய முழக்கம் 1926 - அளவில் தான் மாவட்டம் முழுவதும் தேசிய இயக்கத்தைப் பரப்பும் பொறுப்பை ஓமந்தூரார் ஏற்றார். அதற்கு முதல் படியாக திண்டிவனம், விழுப்புரம் வட்டங்களைத் தேசியக் கோட்டையாக்கினார். 1924-இல் அமாவாசை தோறும் ஓமந்தூராரும், ராஜம் செட்டியாரும், மண்டி சிங்காரம்பிள்ளையும் பாரதமாதா படத்தை யும், மகாத்மா காந்தி படத்தையும் கைகளில் தாங்கிக்கொண்டு தெரு வெல்லாம் பஜனைக் குழுக்களுடன் கதர் மூட்டைகளைச் சுமந்து சென்று நகர்முழுவதும் விற்று வந்தனர். மற்ற நாட்களில் கள்ளுக்கடை சாராயக்கடைகளை மறியல் செய்வதில் ஈடுபட்டார்கள். திண்டிவனத்தில் 1924ஆம் ஆண்டில் ஓமந்தூராரும் ராஜம் செட்டியார் என்ற அவர் நண்பருமாகச் சேர்ந்து தேசியப் பாட சாலை ஒன்றை ஆரம்பித்துச் சில ஆண்டுகள் வரை நடத்தி வந்தார்கள். யூனியன் ஜாக் கொடி ஏற்றாதே! 1927-ஆம் ஆண்டு அளவில் பண்ணுருட்டியில் தமிழ் நாடு வன்னியர் (படையாச்சிகள்) மாநாடு நடைபெற்றது. அம்மாநாட் டில் கலந்து கொள்ளும்படி அன்றைய சென்னை இராசதானி 27