உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யின் முதலமைச்சர் டாக்டர் ப. சுப்பராயன் கேட்டுக்கொள்ளப் பட்டார். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் சின்னமாகிய யூனியன் ஜாக் கொடியை மாநாட்டில் ஏற்றிவைத்து உரை நிகழ்த்து வதாக டாக்டர் சுப்பராயன் தெரிவித்தார். அவ்வாறு நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பெற்றது. இதை அறிந்த ஓமந்தூரார் வெகுண்டு எழுந்து, படையாச்சி சமூகத்திலுள்ள தேசிய இளைஞர்களையெல்லாம் ஒன்று திரட்டி யூனியன் ஜாக் கொடி அந்த மாநாட்டில் ஏற்றப் படுவதைத் தடுத்தார். அதற்குப்பதிலாக வன்னியர் கொடி திடீரென்று உருவாக்கப்பட்டு, அதை, டாக்டர் சுப்பராயன் ஏற்றிவைத்தார். அன்று டாக்டர் சுப்பராயனைப் பற்றி ஓமந்தூராருக்கு ஏற்பட்ட கருத்து, ஓமந்தூரார் மனத்தில் நிலைத்துவிட்டது போலும். ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்தபோது, போலீஸ் அமைச்சராக டாக்டர் சுப்பராயன் இருந்தார். அப்போது (அதாவது 1948) இருவருக்கும் ஏற்பட்ட மோதலுக்கு, பண்ணு ருட்டி நிகழ்ச்சி காரணமாக இருக்கலாம். உப்பு சத்தியாக்கிரகம் வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகம்! நடந்தபோது, ஓமந்தூரார், மாதவ ரெட்டியார், விழுப்புரம் ஆதிநாராயணா, வெங்கட்ட ராம ரெட்டியார் முதலிய ஆறு பேருடன் கால்நடை யாகவே வேதாரண்யத்துக்குப் புறப்பட்டார். யாத்திரையின் மூன்றாவது நாளில் ஓமந்தூரார் கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஓமந்தூரார் தம் நண்பர் களுடன் கிராமப் பிரசாரம் ஆரம்பித்தார். கதர் பிரசாரம் கதர் பிரசாரத்தில் ஓமந்தூரார் 1931இல் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். பின்வருவதுபோன்ற அறிக்கையை அச்சிட்டு, பலரிடமும் உறுதிமொழி எழுதிவாங்கினார். 1. விவரம் அடுத்த கட்டுரையில் காண்க. 28