உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உப்புச்சட்டம் மீறி அதை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு, தர்மயுத்தம் துவக்கி ஏராளமான தேசபக்தர்கள் சகோதர சகோதரிகள் உப்புக்காய்ச்சி உற்பத்தி செய்து, அதனால் இவ்வாக்ஷிமுறையால் சிறை முதலிய தண்டனைகளை உற்சாகத்துடன் அடைந்து. வருகிறார்கள். இந்த அரிய சந்தர்ப்பமாகிய நம் தேச சோதனைக் காலத்தில் நான் தெய்வசாக்ஷியாய் இன்று முதல் கைராட்- டினத்தில் நூற்ற கைத்தறியில் உற்பத்தியாகும் கதரை ஆதரித்து மஹாத்மா காந்தி, வகுத்த திட்டப்படி ஏழை மக்கள் அதன் அன்பிற்குப் பாத்திரமாகும் வண்ணம் கதரைத் தவிர வேறு ஆடைகளை அணிவதில்லை என்று பிரதிக்ஞை செய்கிறேன். என் நண்பர்களையும் என் வழிக்கு திருப்ப முயலுவேன் கடவுள் துணை செய்க. கையெழுத்து. தேதி: விலாசம்: வயது: உறுதிமொழியில் கண்ட விஷயங்களை நன்றாய் ஆலோசித்து தயவுசெய்து கையெழுந்து செய்யவும். ஒருபாதியை தாங்கள் வைத்துக்கொண்டு, மற்ெ றரு பாதியை அடியிற்கண்ட விலாசத்திற்கு அனுப்பவும், பெ. இராமசாமி ரெட்டி 7.ச. இராஜம் செட்டி கதர்சாலை, திண்டிவனம். அரசியல் மாநாடுகள் புதுச்சேரி மாநிலத்தின் எல்லையிலுள்ள சொர்ணாவூர், சிறுவந்தாடு என்ற சிற்றூர்கள் ஓமந்தூராரின் வாழ்க்கையில் சிறப்பிடம் பெறுபவை. இந்த ஊர்களில் இன்றும் ஏராளமான தியாகிகளைக் காணலாம். ஓமந்தூராரின் முயற்சியால் அக்காலத் தில் பெரிய அளவில் அரசியல் மாநாடுகள் இந்தச் சிற்றூர்களில் நடைபெற்றன. 29