உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவந்தாடு அருகே 1 சொர்ணாவூருக்கு ஆனால் புதுச்சேரி மாநில எல்லையைக் கடந்து - சிறுவந்தாடு என்னும் சிற்றூர் உள்ளது. இந்த ஊரும் தமிழ் நாட்டின் தேசிய வரலாற்றில் புகழ்பெற்ற ஏராளமான தியாகிகளை வழங்கியிருக்கிறது. கே. சீனிவாச ரெட்டியார், எஸ். பி. வீராசாமி ரெட்டியார், மணியக்காரர் எஸ்.கே.லெட்சுமிநாராயண ரெட்டியார், எஸ். ஏ. தேவநாயக ஐயா போன்ற ஏராளமான தியாகிகள் இவ்வூரினர் ஆவர். மற்றும்,ஓமந்தூராரின் வலதுகரமாக விளங்கிய சின்னசாமி ரெட்டியாரும்இவ்வூரினரே. சின்னசாமிரெட்டியாரும் அவருடைய மனைவியாரும் ஓமந்தூராரின் கருத்துக்கு இணங்க தேசியப் போராட்டத்தில் சிறை சென்றது குறிப்பிடத்தக்கது. இவருடைய முயற்சியாலும் மணியக்காரர் எஸ். கே. லெட்சுமிநாராயண ரெட்டியார் முயற்சியாலும் இவ்வூரில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் பெயரால் பொதுமக்களுடைய நன்கொடையால் ஒரு மருத்துவமனை அமைக்கப்பட்டு 25 -1-1953-இல் அன்றைய முதலமைச்சர் இராஜாஜி அவர்களால் திறந்துவைக்கப்பெற்றது. இது இப்போது கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஆரம்ப சுகாதார நிலையமாக இயங்கிவருகிறது. இவ்வூரில் 1927-ஆம் ஆண்டிலேயே ஓமந்தூரார், காந்தி ஆசிரமம் ஏற்படுத்தி கதர் கொள்கையையும், காந்தியடிகளின் நிர்மாணத் திட்டத்தையும் பரப்புவதில் இவ்வூர் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். 1927-க்கும் 1934-க்கும் இடையில் இவ்வூரில் மூன்று தடவை அரசியல் மாநாடுகளை ஓமந்தூரார் நடத்தினார். கள் குடியாதே, கள் இறக்க மரம் விடாதே: 1930 முதல் 1934 வரை இடையிடையே நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு திண்டிவனம், விழுப்புரம், கடலூர். சிதம்பரம், விருத்தாசலம் வட்டங்களில் பாத யாத்திரை சென்று, "கள் குடியாதே" "கள் இறக்க மரம் விடாதே" "கதர் கட்டு" என்று பிரசாரம் செய்தார். 31