உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியலில் தூய்மை காத்தவர். தமிழகத்தில் முதல்வர் பதவி அவரைத் தேடி வந்தது. ஆந்திரம், கேரளம், கர்னாடகம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளைக் கொண்ட பழைய சென்னை பகுதிகளைக்கொண்ட மாகாணத்தின் முதல் அமைச்சர் பதவியில் அவர் இருந்தபோதும் இறைவனையே நினைத்திருந்தார். அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் வடலூரிலே சென்று வாழ ஆரம்பித்தார். தம்முடைய செல்வம், செல்வாக்கு எல்லாவற்றையும் அர்ப்பணித்து சுத்த சன்மார்க்க நிலையம்' கண்டார். அதன் பணிக்கே தம்மை முழு மகிழ்ச்சியுடன் ஈடுபடுத்திக் கொண்டு, அங்கேயே கடைசிவரை வாழ்ந்தார். மாகாண முதல்வராக இருந்தபோதுகூட கிடைக்காத மகிழ்ச்சியை அந்த நிலையத்து ஏழை அனாதைக் குழந்தைகளின் தொண்டில் அடைந்தார். சுத்த சன்மார்க்க நிலையத்துக்கு இருநூறு ஏக்கருக்குமேல் நிலங்களை வாங்கிச் சேர்த்து அது நிலையாக நடைபெறுவதற்கான அறக்கட்டளையையும் உருவாக்கினார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையம் வள்ளல் பெருமானின் லட்சியப்படி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அனாதை மாணவர் இல்லமும், சுத்தசன்மார்க்க சாதனையில் ஈடுபடும் சான்றோர் வாழ ஓர் இல்லமும், மனத்திற்கு பேரமைதியைத் தரும் ஓர் அழகிய தியான மண்டபமும், உயர் தரப் பள்ளிக்கூடமும் இயங்கி வருகின்றன. அவர் இருந்தபோது ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவமனை ஒன்றையும் அங்கே நடத்தி வந்தார். இன்றும் இந்த ஸ்தாபனங்கள் எல்லாம் வடலூரில் ஒப்பற்ற கல்விப் பணிகளையும், அருள் பணிகளையும் ஆற்றி, வடலூரின் சூழ்நிலையை உயர்த்தி வருகிறது. ஓ.பி.ஆர். போன்ற ஒழுக்கச் சீலர்கள் பல தலைமுறை களுக்கு ஒரு முறைதான் தோன்றுவார்கள். இப்பேர்ப்பட்ட உத்தமர்களைப் பற்றி அடிக்கடி சொல்லிவந்தால்தான், இந்த நாட்டில் மேலும் உத்தமர்கள் தோன்றுவார்கள். அதனால் தான்