உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம் காலத்தில் வாழ்ந்த இந்தப் வரலாற்றை எழுதி பெரியாரின் வாழ்க்கை வெளிப்படச் செய்யவேண்டும் என்று எண்ணினேன். ஓ. பி. ஆருடன் நெருங்கிப் பழகியவர்களான சிலரை அணுகி அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதும்படி தூண்டினேன். அவர்களுக்கு விருப்பம் இருந்தும் அவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை காரணமாக அவர்களால் முடியாமல் போய்விட்டது. ஓ.பி.ஆர். அவர்கள் 1970ல் அமரத்வம் பெற்றபோது அவர் வாழ்க்கை வரலாற்றை விரைவில் எழுதி வெளியிட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்தேன் அவரு எழுபது டன் பழகியவர்கள் எல்லாம் வயதையும் எண்பது வயதையும் தாண்டியவர்களாக இருந்தார்கள். அவர்களும் மறைந்து விட்டால் ஓ. பி. ஆர். அவர்களைப் பற்றிய செய்தியே எதிர்காலத் தலைமுறைக்குத் தெரியாமல் போய்விடுமே என்று கவலைப்பட்டேன். என்னுடைய கவலையை எழுத்தாள நண்பர் சோமலெ யிடம் தெரிவித்தேன். அவர் ஓ. பி. ஆர். வரலாற்று நூலை எழுதுவதற்கு முன்வந்தார். இந்த நூலை எழுதுவதற்காக திரு. சோமலெ பத்து மாத காலம் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். ஓ. பி. ஆர். உடன் பழகிய முன்னூறுக்கு மேற்பட்ட வயது முதிர்ந்த பெரியோர்களைச் சந்தித்து விஷயங்களைச் சேகரித்தார். சோமலெயின் பிரயாணச் செலவையும் இதர செலவு களையும் என் தந்தையார் பெயரில் இருக்கும் நாச்சிமுத்து அறக்கட்டளை ஏற்றுக்கொள்ள முன் வந்தது. சோமலெயைச் சந்தித்த பெரியார்களில் பாதிபேர் இன்று இல்லை. இன்னும் கால தாமதம் ஏற்பட்டிருந்தால் ஓ. பி. ஆரைப் பற்றிய எவ்வளவோ விஷயங்கள் மக்களுக்குத் தெரியாமல் போயிருக்கும். சோமலெ தாம் சந்தித்த முன்னூறுக்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த பெரியவர்களிடமிருந்து சேகரித்தச் செய்தி களுடன் அரசாங்க பத்திரங்களிலும் கிடைத்த பல தகவல்களை யும் முறைப்படுத்தித் தொகுத்தும் வகுத்தும் இந்த அருமையான நூலை எழுதி இருக்கிறார்.