ஓ.ஆர்.சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்த காலத்தில் நாடுபெற்ற நலனை இந்த நூலில் காணமுடிகிறது. ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப் பதற்கு ஓமந்தூராரின் ராஜதந்திரம் எவ்வளவு கைகொடுத்திருக் கிறது என்பதைப் பார்க்கும்போது நமக்கு வியப்பாக இருக்கிறது. இதுபோலவே பிரஞ்சு நாட்டின் ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் ணைவதற்கும் திரு.ஓ.பி.ஆரின் சாதனை எவ்வளவு மகத்தான தாக இருந்திருக்கிறது என்பதையும் பார்த்துப் பிரமிக்கவேண்டி இருக்கிறது. திரு.ஓ.பி.ஆர். சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோது விவசாயத் துறையில் பல்வேறு ஆய்வுகளைச் செய்ய வழி வகுத்திருக்கிறார். பழத்தோட்ட வளர்ச்சிக்குத் தமிழ் நாட்டில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி ஓ. பி. ஆர். எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பயிர் பாதுகாப்பு இன்ஷியூரன்ஸ் திட்டத்தைக்கொண்டு வருவதற்கு திரு.ஓ.பி .ஆர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் இப்போதுதான் பயன்பட ஆரம்பித்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற உடனே உடனே சென்னை சென்னை மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சர் பதவியை திரு.ஓ.பி .ஆர். ஏற்றதால் பல சிக்கலை அவர் எதிர்பட வேண்டியிருந்தது. அவற்றை அவர் எவ்வளவு துணிவுடனும் தீர்க்க தரிசனத்துடனும் தீர்த்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இளமையில் இருந்தே திரு. ஓ.பி.ஆர். அவர்களுக்குத் தமிழ் மொழியிலும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கை யிலும் இருந்த ஈடுபாட்டை இந்த நூலில் காணலாம். திரு.ஓ.பி.ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலுக்குள் 100பேருடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளையும், தமிழ்நாட்டின் அந்த நாளைய சூழ்நிலையையும்மிக அற்புதமாக இணைத்திருக்கும் ஆசிரியரின் உத்தி பாராட்டுக்கு உரியது. கரடு முரடான பல சங்கதிகளை நகைச்சுவையுடன் ஆசிரியர் எடுத்துக் கூறும் அழகு படித்து அனுபவிக்கவேண்டிய சுவையான பகுதிகளாகும்.
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/11
Appearance