உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் மக்கள் கோழைகளாக அஞ்சி அஞ்சிச் சாகாமல் அவ்வப்போது பதவியில் இருப்பவர்களுக்குத் தாளம் போடாமல் நோமைக்கும் நியாயத்துக்கும் மதிப்பளித்து வாழ்வதற்கு இந்த ஓ.ஆர்.வரலாற்று நூல் வழிகாட்டும் என்று நம்புகிறேன். இந்த அருமையான வரலாற்று கலை இராமலிங்கர் பணிமன்றத்தின் மூலமாவது 69. பி.ஆர். அவர்கள் நிறுவிய சுத்த சன்மார்ந்த நிலையத்தின் மூலமாவது வெளியிட வேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த போது திரு. அப்பாக்குட்டி அவர்கள் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலப் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடுவதற்கு முன்வந்தார். திரு.ஓ.பி.ஆர் அவர்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர் களில் ஒருவர் சர்தார் வேதரத்னம் அவர்கள் ஓ,.ஆர். அவர் களைப்போலவே காத்தி அடிகளின் லட்சியப்படி வாழ்க்கையை நடத்தி வந்த சத்திய சீலர். அவர் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் என்ற நிறுவனத்தின் மூலம் பெண்களுக்கு கல்விப் பயிற்சியும், தொழிற் பயிற்சியும் அளித்து வந்தார். சர்தார் வேதரத்தினம் அவர்கள் ஆரம்பித்த அந்த குருகுலத்தை அவருடைய மகன் திரு. அப்பாக்குட்டி அவர்கள் சிறந்த முறையில் இப்போது நடத்தி வருகிறார். அனாதைப் பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்காகவே கஸ்தூர்யா காந்தி கன்யா குருகுலப் ஆரம்பிக்கப்பட்டது பதிப்பகம். அந்தப் பதிப்பகத்தின் மூலம் இந்த நூல் வெளி வருவது மிகவும் பாராட்டுக் குரியது என்பதில் சந்தேகமில்லை. சிறந்த முறையில் குறைந்த காலத்தில் அச்சிட்டு நூலை வெளி கொணர்ந்திருக்கும் திரு. அப்பாக்குட்டியைப் பாராட்டு கிறேன். நூ "விவசாய முதல் அமைச்சர்" என்ற இந்த நூல் ஒவ்வொரு தமிழனுடைய வீட்டிலும் இருக்கவேண்டிய ஓப்பற்ற வரலாற்று ல். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் ஒவ்வொரு சோதனை யிலும் எப்படி ஈடுகொடுத்து உயரலாம் என்பதையும் இந்த நூல் போதிக்கிறது. இந்த நூலைப் படிப்பதின் மூலமாக ஒரு மனிதன் எப்படித் தூய்மையாக வாழவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.