பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - விவாகமானவர்களுக்கு - இறிச் செய்யும் ஆப்பரேஷன் வேறேதேனும் செய்ய வேண்டி யிருந்தாலொழிய இதை யாரும் சாதாரணமாகச் செய்து சிென்ள விரும்புவதில்லை. ஆல்ை இப்பொழுது லண்டன் பிரசவ வைத்திய நிபுணர் ஆர்மிட்டேஜ் என்பவர் காட்டிய தின் பயனுய், இந்த ஆப்பரஷன் வயிற்றைக் கீறிச் செய்யா மல் பெண்குறி வழியாகவே செய்யப்படுகிறது. அதல்ை_கஷ் டமுமில்லை. அபாயமுமில்லை. அதிக நாட்கள் ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டிய அவசியமுமில்லை. இப்பொழுது இதைவிடச் சுலபமாக இன்னொரு ஆப்ப ரேஷன் செய் ருர்கள். அது மூலமாக, கர்ப்பப்பையிலிருந்து சினைக்குழாய்களுக்குப் போகும் வாயில்களை மின்சார உதவி கொண்டு தீய்த்து விடுகிருர்கள். இந்த ஆப்பரேஷனுக்கு இஞ்செக்ஷன்கூடத் தேவையில்லை. எந்த உறுப்பையும் 3ற்க்க வேண்டியதுமில்லை. இது ஒரு சிறு ஆப்பரேஷன். சினைக் குழாயைத் துண்டிக்கும் ஆப்பரேஷன் செய்வதற் குச் சிறந்த சமயம் குழந்தை பெற்ற 4 நாட்களுக் குள்ளாகும். டாக்டர் ஹேர் என்னும் பிரபல சர்ஜன் - ஆணுக்கு விந்துக் குழாயையும் பண்ணுக்குச் சினைக்குழாயையும் துண்டிப்பதானது ஆப்பரேஷன்களுள் கொஞ்சங்கூடக் கெடு தில் செய்யாதவை. சம்போக ஆசையும் நிர்வாகமும் இன் பமும் இம்மிகூடக் குறைவதில்லை' என்று கூறுகிரு.ர். இந்த ஆப்பரேஷன்கள் சிறந்த கர்ப்பத்தடைகளாயிருப் பதோடு ஆணுக்கும் பெண்ணுக்கும் இளமை தருவதாயும் இருக்கின்றன, எப்பொழுதும் சோர்வாக இருப்ப்வர்களும் ள்மையிலேயே வயோதிகத் தன்மையடைப்வர்களும் எந்த வலையையும் சரியாகச் செய்ய முடியாதவர்களும் இந்த ஆப்பரேஷன்களால் அளவற்ற நன்மை பெறுவதாகவும் ன்வத்திய ஆசிரியர்கள் கூறுகிருர்கள். ஆணிடமுள்ள பீஜமும் பெண்ணிடமுள்ள சினைப்பையும் முறையே சந்தான விர்த்திக்காக வேண்டிய சுக்கில உயிர் தளையும் முட்டைகளையும் உற்பத்தி செய்வதோடு நிற்காமல் வேறு ஒருவிதமான சத்தையும் உற்பத்தி செய்கின்றன.