பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 26 - விவாகமானவர்களுக்கு - அப்படி இரண்டு வழிகளைச் சேர்த்து அனுஷ்டித்தால் கட்டா யமாகக் க்ர்ப்பம் தரிக்காது என்றும் வற்புறுத்துகிருர்கள். இவ்விதம் இரண்டு வழிகளைச் சேர்த்து உபயோகிப்பதில் ரப்பர் உறை-களிம்பு முறையே நம்முடைய நாட்டுக்கு உகந்தது என்று மேலே கண்டோம். ஆதலால் அதையே நாட்டில் ரப்பர் மூடி முறையைக் கையாளக் கூடிய வசதிகள் ஏற்படும் வரை கையாளுதல் நல்லது. நீடித்த முறைகள் இதுவரை கர்ப்பத் தடைக்காக சம்போகம் செய்யும் ஒவ்வொரு தடவையும் உபயோகிக்க வேண்டிய சாதன ங் க்ளைப் பற்றிக் கூறினேன். இனி ஒரு முறை உபயோகித்தால் பல மாதங்கள் வரை கர்ப்பம் உண்டாகாமலும், மறுபடியும் கர்ப்பம் உண்டாகுமாறு செய்யக்கூடியதுமான முறைகளைக் கூறுகிறேன். ஆண்மகனுடைய விந்துக் குழாயையும் பெண் மகளு டைய சினைக் குழாயையும் துண்டித்துவிடும் ஆப்பரேஷன் களைச் செய்து கொண்டால் கர்ப்பம் உண்டாகாது என்ற விஷயத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். அதுபோன்ற முறை கள் இன்னும் நாலைந்து உள. அவைகள் எல்லாம் இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே உள. ஆயினும் உலகில்-இது சம்பந் தமாக எவ்விதமான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன என்பதை அறிவதும் அவசியமே. கிராபென் வளையம் விந்து கர்ப்பப்பைக்குள் போகாமலிருப்பதற்காக ஆதன் கழுத்தை மூடும் ரப்பர் பெஸாரிகளைக் குறித்துக் கூறினேன் அல்லவா? ஆளுல் கழுத்தை மூடாமல் அதன் வாயில் ஏதே னும் முளைபேர்ல் ஒன்றை வைத்து ஆடைத்து விட்டால் Fம்ப்ோகம் செய்யும் சமயமெல்லாம் பெலாரியைத் தேட வேண்டாம் அல்லவா? அப்படி எதை வைக்கலாம் என்று பிரான்ஸிலும் ஜெர்மனியிலும் பல வருஷங்கள் ஆராய்ச்சி ---