பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 17.3 வார்கள். அவர்கள் கர்ப்பமுற்று மூன்று மாதங்கள் ஆவ தற்குள் வரவும் வேண்டும். இதுதான் வித்தியாசம். மற்ற படி எந்தப் பெண்ணுக்கும் கர்ப்பச் சிதைவுச் சிகிச்ச்ை பெறப் பரிபூரணமான் உரிமை உண்டு. ஆயினும் கர்பபச் சிதைவு செய்தால் கெடுதல் உண் டாகும் என்னும் சமயத்திலும், கர்ப்பச் சிதைவு செய்து ஆறுமாதம் ஆவதற்குள் மறுபடியும் கர்ப்பச் சிதைவுக்கு வரும் பெண்கள் விஷயத்திலும் ட்ாக்டர் கர்ப்பச் சிதைவு செய்ய மறுத்துவிடலர்ம். ஆஸ்பத்திரியில் செய்யும் கர்ப்பச் சிதைவால் ஆபத்து உண்டாவதேயில்லை. மாஸ்கோ ஆஸ்பத்திரியில் கர்ப்பச் சிதைவுக்கான பிரதம டாக்டர் கெனஜ் என்பவர் 25ஆயிரம் பேர்க்குச் செய்ததில் ஒரு பெண் மட்டுமே இறந்துபோக நேரிட்டதாகக் கூறுகிருர். பெண்கள் ஆஸ்பத்திரியில் மூன்று நாட்கள்தான் படுத்திருக்க வேண்டும். வேறு அசெளக்கியம் எதுவும் கிடையாது. ஆளுல் அங்கே இப்படி ஆயிரக்கணக்கான கர்ப்பச் சிதைவுகள் நடைபெறுவானேன்? கர்ப்பத் தடையை அனுஷ் டித்தால் இத்தனை அதிகமான கர்ப்பச் சிதைவு ஏற்பட வேண்டிய அவசியமிராதே என்று கேட்கலாம்; உண்மயை 'தான். கர்ப்பச் சிதைவைவிடக் கர்ப்பத் தடைதான்நல்லது, டாக்டர் கென்ஜும் எவ்வளவு அபாய மில்லாமலும் |அசெளகர்யம் ஏற்படாமலும் செய்தபோதிலும், கர்ப்பச் சிதைவு எப்பொழுதும் பெண்களுடைய உறுப்புக்களைப் பல வீனப்படுத்தவே செய்யும் என்று கூறுகிருர். அத்துடன் கர்ப்பத்தடையை யாருக்கும் தெரியாமல் கையாளலாம். கர்ப்பச் சிதைவோ ஆஸ்பத்திரிக்கு வந்தே செய்து கொள்ள வேண்டும். அதனால் ஏற்படும் கஷ்டங்கள் பல. மேலும் கர்ப்பச் சிதைவுக்காகப் பெண்கள் 10 நாள் ரஜா பெற வேண்டி யிருப்பதால் அத்தனை நாள் சம்பளம் நஷ்டமாகும் என்று சோவியத் சர்க்கார் கருதுகிருர்கள். o ஆதலால் கர்ப்பத்தடை முறைகளைப்பற்றி ஆராயவும் இபாதுஜனங்களிடம் பரவச் செய்யவும் ஏற்பாடு செய்திருக் கிருர்கள். நாம் மேலே வித்தனையோ கர்ப்பத்தடைச் சாதனங்களைப்பற்றி ஆராய்ந்தோம். ஆயினும் எதையும் :ரிபூரணத் திருப்தி தரக் கூடியதாகக் கூற முடியவில்லே