பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 43 பொழுதே மக்கட்பேற்றைப் பற்றிச் சிந்திக்கலாம். அப்படிக் காதல் வளரும் காலத்தில் இருவருடைய உடலும் மக்களைப் பெறுவதற்குத் தக்கவாறு அமைந்து கொள்ளவும் ஏதுண்டு. அதல்ை கல்யாணமாகி ஒரிரண்டு வருஷங்கள் சென்றபின் கருத் தரித்தலே நலம் தருவதாகும். (2) அப்பொழுது பெண்ணின் வயது I & க்கும் கணவனின் வயது 21-க்கும் குறைவாக இருக்குமானல். குழந்தை பெற அந்த வயது வரும்வரை காத்திருத்தல் வேண்டும். பெண் சிறுமியாயிருந்தால் அவளுடைய குழந்தை பெற வேண்டிய அங்கங்கள் பூரண வளர்ச்சி அடைந்திரா. அதனால் ஆயுதம் போட்டோ, வயிற்றைத் திறந்தோ குழந்தையை எடுக்க வேண்டிய அவசியம் உண்டாகும். அந்த இரண்டும் பெண்ணின் உயிருக்கு ஆபத்தானவை என்பதை எல்லோரும் அறிவார்கள். அந்தக் காரணத்தால் டாக்டர் லட்சுமணசாமி முதலியார் செய்த ஆராய்ச்சியில் சென்னையில் பிரசவம் காரணமாக இறக்கும் பெண்க ள ல் மூன்றில் ஒரு பகுதியார் 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவரே எனறு கனடாா. - (3) பெண்ணுக்கு 18 வயதாயிருக்கலாம். ஆனாலும் அவள் நோயா யிருப்பாளானல், அப்பொழுதும் அவள்நோய் குணமாகும் வரை குழந்தை பெறலாகாது. பெண்ணுக்கு சுவாசப்பை சம்பந்தமான கூடியரோகமோ, கர்ப்ப்ப்பை சம்பந்தமான சில நோய்களோ இருக்குமானல், அவள் கருத் தரித்தால் அவளுடைய உயிருக்கும் குழந்தையின் உயிருக்கும் ஆபத்தாய் முடிந்துவிடும். (4) கணவனே, மனைவியோ கிரந்தி, பைத்தியம், காக் கைவலி போன்ற ரோகங்கள் உடையவராயிருந்தாலும் கர்ப்பமாதல் கூடாது. மூளை சம்பந்தமான சில நோய்கள் கர்ப்பவதியை நாணிட்டுக்கொண்டுகூடச் சாகும் படி செய்து விடும். கிரந்தி போன்ற நோய்கள் பிறக்கும் குழந்தைகளின் கண்களைக் கவர்ந்து கொள்ளும். o (5) கர்ப்பமாயிருக்கும் சமயத்திலும் பிரசவ சமயத் திலும் போதிய போஷணையும் வைத்திய வசதியும் பெறு வதற்கும், குழந்தையைக் காப்பாற்றி நன்கு வளர்ப்பதற்கும் வேண்டிய பொருளும் வருவாயும் உள்ள பொழுதே மிக்க்ட் பேற்றைச் சிந்திக்கலாம். அது இல்லாதவர் அதை அறவே மறந்துவிட வேண்டியதே.