பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 5& கிழிந்துபோவதுமுண்டு. ஆனால் சாதாரணமாக கல்யாண மான் பின் சம்போக சமயத்தில் மணமகன் ஆண்குறியை நுழைக்கும் போதே அது கிழிவதாகும். அப்படிக் கிழியும் போது உதிரம் பெருகி வேதனை தருமாதலால் அதை மண நாட்களுக்கு முன்னர் டாக்டரைக் கொண்டு கிழித்துச் சரி செய்து கொள்ளும்படி ஸ்டோப்ஸ் அம்மையார் யோசனை கூறுகின்ருர். சினைப்பை : -இதுவே ஆண்மகனுடைய பீஜத்துக்கு நேரான பெண் உறுப்பாகும். இதுவேபெண்களுக்குரிய விசேஷ. வித்தியாச குணங்களைச் சிருஷ்டிப்பதாகவும் உள்ளது. கர்ப் பப் பைக்கு வலது பக்கமும் இடது பக்கமுமாக இரண்டு சினைப்பைகள் உள. ஒவ்வொன்றும் ஒன்றரை அங்குல நீளமும் முக்கால் அங்குல அகலமும் உடையது. அநேகமாக வலது ப்ை இடது பையைவிடப் பெரிதாயிருக்கும். இந்தப் பைகளில்தான் கர்ப்பம் உண்டாவதற்கு இன்றியமையாத சுரோணித முட்டைகள் வளர்ந்து பருவமடைகின்றன. ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய இரண்டு சினைப்பை களிலும் д:цогт гio 30 ஆயிரம் முட்டைகளுடனேயே பிறக்கின்ருள். ஆயினும் அவற்றுள் கருவாகக் கூடியனவாக முதிர்வன சுமார் முன்னுாறு நானுறே யாகும். அப்படி முதிர்ந்து கருவாகக் கூடியதாக வெளியாகும் சமயத்தைத் தர்ன் பெண் பருவமடைதல்” என்று கூறுகிருேம். அது அநேகமாக 13-15 வயதில் ஆரம்பித்து 40-50 வயதுவரை நடைபெறும். அப்படி 30 வருஷ காலமாக 300-400 முட்டைகள் முதிர்ந்து வெளிவரினும் அவற்றுள் சிலவ்ே: பலப்படுகின்றன. ஏனையவெல்லாம் இறந்து பட்டு சூதகத்துடன் கழிந்துபோகின்றன. பெண் பருவமடைவதற்கு முன் சிறியதாயிருக்கும் சினைப் பைகள் பருவமடைந்ததும் விரிந்து விடுகின்றன. முட்டைகள் ஒவ்வொன்றும் ஒரு சிறு தனிப்பையில் வளர்ந்து தக்க முதிர்ச்சி பெற்றதும், சினைப்பையின் மேற் புறத்திட்ம் வந்து பையைக் கிழித்துக்கொண்டு வெளி யேறுகின்றது. சாதாரணமாக _ஒரு_ தடவையில் ஒரு சின்ைப்பை ஒரு முட்டையையே வெளியே அனுப்பி வைக் கின்றது. சில சமயங்களில் இரண்டு முட்டைகள் வெளியாகிக் கருவாகும் பொழுதுதான் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அபூர்வமாக இரண்டுக்கு மேற்.