பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 6& உள்ள காலத்தில் காதல் வாழ்வுக்கு இடமேது? காதல் வாழ்வுக்கு இடம் தந்தால் கஷ்டங்களே விளையும். இதைப் பற்றியும் விவரிக்க வேண்டியதில்லை. ஆனல் இளந் தம்பதிகள்-ஆரோக்கியமும் பலமும் உடையவர்-ஒருங்கே நெருங்கி வாழ்ந்து வருபவர்-பரஸ் பரம் காதல் வெள்ளம் பெருகியுள்ளவர்-இவர்களைப் பிரம சரிய வாழ்வை மேற்கொள்ளச் சொல்லுவது சரியா? அதுவும் அநேகமாக 30 வருஷகாலம் என்ருல், மனித சக்திக்கு மீரிய தல்லவா? காதல் என்பது இயற்கை அன்னை அளித்த வரப் பிரசாத மல்லவா? மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ள மகத்தான சக்தியல்லவா? மும் மூர்த்தி களாலும் அடக்கமுடியாத தெய்வீக உணர்ச்சியல்லவா? திரு நீலகண்ட நாளுர் தம்பதிகள் போல் எல்லோரும் வாழ இயலுமோ? சாதாரண மக்களின் சக்திக்கு அப்பாற்பட்ட அரும் பெருங் காரியம் என்பதனாலேயே திருநீலகண்டர் தம்பதிகள் போற்றப்படுகின்றனர். அதை நினைத்தே பட்டி னத்தடிகள் போன்ற துறவிகளுக்கரசரும் மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேனல்லேன்' என்று கூறுகின்ருர். திருநீலகண்டர்போல் வாழ்வோம், ளமை துறப் போம், காதலைக் கடிவோம், பிரமசரியம் கைக்கொள்வோம்" என்று சிலர் எண்ணலாம்; முயற்சிக்கலாம். ஆனல் மக்கள் மனதில் ஆழ்ந்து வேரூன்றியுள்ள அழியா உணர்ச்சியை அதிக்க் கால்ம் தொடர்ந்து அடக்கி வ்ந்தால் ஆபத்தே விளையும். தம்பதிகள் இருவர்க்கும் எப்பொழுதும் அதிருப்தியே. சிறு விஷயங்கள் கூட் மனத்தைக் குழப்பி விடும். சாந்தி கிடையாது, சுமுகமான குணம் மாறிவிடும். சுரீரசுகமும் கெட்டுவிடும் தம்பதிகள் இருவர்க்கு மிடையில் சந்தோஷ் சமாதான வாழ்வு என்பது இல்லாமல் போகும், உடலும் உள்ளமும் தத்தம் நிலையில் நின்று வாழ்வுக்கு இன்பம் அளிக்கவேண்டுமானல் காதலை மறுத்தலாகாது. காதல் வாழ்வை, அதிகப் பலன் தரும் பொருட்டு கட்டுப்படுத்தலாம். ஆனல் அதை அறவே அழிக்க ஆரம் பித்தால் அது வாழ்வையே அழித்துவிடும். ஆனாலும் சிலர், அளவுக்கு மிஞ்சிய மக்கட் பேறு வேண்டாமே, வேண்டாதபோது குழந்தை பெறுவதும் வேண்டாமே என்று எண்ணி, பிரமசரியத்தை அனுஷ் ஆரம்பிக்கக்கூடும். அத்தகையோர் யார்? மனித சமூ க்க o 播 o Чд: Ai to- அறிவுடைய்ோர்-ம்ன் அடக்கமுடையவர்-மிக்' தில் ുണ്