பக்கம்:வீடும் விளக்கும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 99 வேந்தனும் எதிர்த்தான். மூண்டது கடும்போர். அவ் வூர்க் குடிமக்கள் அனைவரும் தம் நாட்டின் நன்மைக் காகப் போர்புரியலானார்கள். அதுதானே அக்கால முறையும் வழக்கமும், அம்முறைப்படியே அப் பெண்ணின் அண்ணனும் கணவனும் போர்க்குச் சென்றனர். வலுத்தது போர். இருபக்கத்திலும் மாண்டோர் பலர். போரோ கின்றபாடில்லை. முதல் நாட்போரில், அண்ண்ன் எதிரியின் யானைப்படை களை யெல்லாம் வெட்டி யெறிந்து தானும் மர்ய்ங் தொழிந்தான். இரண்டாம்நாள் போரில் கணவனும் இறந்துபட்டான். மறுநாளும் போர் தொடங்கிற்று. பார்த்தாள் வீரப் பெண். என்ன செய்தாள்? மேலும் போருக்கு ஆளனுப்ப வேண்டுமென விரும்பினாள். வீட்டில் எஞ்சியிருந்தவன் தன் ஆண்மகன் ஒருவனே. அவனோ சரியாக ஐந்து வயதும் கிரம்பாச் சிறுவன். சிறுவன் என்று விட்டாளா? அழைத்தாள் அவனை எண்ணெய் தடவி அவன் குடுமியைத் திருத்தினாள். வெண்மையான ஆடை உடுத்தினாள். வேலொன்றைக் கையில் கொடுத்தாள். அவனை நோக்கி, "என் அருமைக் குழந்தாய்! கின் முன்னோர் அனைவரும் வீரப்போர் நிகழ்த்தி இறந்துபட்டனர். அவர் தம் நினைவிற்கு அறிகுறியாக நடப்பட்டுள்ள கற்கள் இதோ இருக் கின்றன பார்' எனக் கூறிப் பழைய நடுகற்களைக் காட்டினாள். காட்டி, "நீயும் அவ்வீரக் குடியில் பிறந்தவன்; ஆதலின் போர்க்குச் சென்று வெற்றி