பக்கம்:வீடும் விளக்கும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விடும் விளக்கும் பெற்று வருக' என்று அறிவுறுத்தினாள். அணைத் தாள். உச்சிமோந்தாள். அனுப்பியும் விட்டாள். வீர மகனும் சென்று போர் புரியலானான். தாய் தன் மகன் வெற்றிபூண்டு விரைவில் வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவ் வமயம் உண்மையறியாது மாறியுணர்ந்த பலர் தாயை யணுகி, நின்மகன் எதிரிக்குத் தோற்றுப் புறமுதுகிட் டோடிவிட்டான் என்று புகன்றனர். கேட்டாள் வீரத் தாய். வயிறெரிந்தது. மகன்மேல் மூண்டது சினம். ஒரு வாளைக் கையில் ஏந்தினாள். என்மகன் புறமுது கிட்டது உண்மையாயின், அவன் பாலுண்ட என் மார்பை இவ்வாளால் அறுத்துக் கொள்வேன் என வஞ்சினம் கூறினாள். அடைந்தாள் போர்க்களத்தை. புரட்டினாள் பிணங்களை. மகன் தோற்கவும் இல்லை. புறமுதுகைக் காட்டவும் இல்லை. ஓடிவிடவும் இல்லை. மார்பினும் முகத்தினும் விழுப்புண் (வீரர்க்கு ஓரணி) பட்டு இறந்துகிடந்தான். அவன் பிணமும் மல்லாந்தே கிடந்தது. விரையொன்று போட்டால் சுரையொன்றா முளைக்கும்? கண்டாள் வீரத்தாய்க் கிழவி. ஒப்பாரி வைத்தாளா? இல்லை யில்லை. அரிய நோன்பியற்றி அம்மகனைப் பெற்றபோது எவ்வளவு மகிழ்ச்சி யுற்றாளோ, அதனினும் பன்மடங்கு இப்போது மகிழ் வுற்றாள். வாழ்க்கையில் சிறந்ததொன்றைச் செய்து முடித்ததாகவும் பூரித்தாள். என்னே அம்மடந்தையின் வீரம் இவ்வரலாறு நமக்கு நல்ல உணர்ச்சி ஊட்டு கின்றதல்லவா?