பக்கம்:வீடும் விளக்கும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் |{}} இங்கிகழ்ச்சியினை, ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண்புலவரால் பாடப்பெற்ற 'கெடுக சிங்தை கடிதிவள் துணிவே' என்று தொடங்கும் (279) புறப்பாட்டும், காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்புலவரால் பாடப்பெற்ற "நரம்பெழுங் துலறிய கிரம்பா மென்றோள்' என்று தொடங்கும் (278) புறப்பாட்டும் தெள்ளிதின் உணர்த்துகின்றன. இப்பாடல்களைப் பெண்புலவர்களே பாடியிருப்பது குறிப்பிடத் தக்கதாம். இங்ங்னம் தாய்மார்களின் உள்ளத்தில் வீர உணர்ச்சி ஊறவேண்டும். இவை போன்ற செய்யுட்களையும் வரலாறுகளையும் அவர்கள் துருவித் துருவி ஆராயவேண்டும். போருக்குச் செல்ல லாகாது என்னும் கருத்தில், பந்திக்கு முந்து படைக்குப் பிந்து' என்னும் பழமொழியைப் பயன் படுத்தப் பெரிதும் வெட்கப்பட வேண்டும். எனவே, ஒவ்வொரு தாயரும் தம்பிள்ளைகளை வெறுங் கோழைகளாக்காது வீரமணிகளாக வளர்க்க வேண்டும். செல்லம் கூடாது: மற்றும், வேலை கொடுத்தால் பிள்ளை நொந்து போகும் என்ற இரக்கம் மிகுதியாக இருத்தலாகாது. ஏனெனில், பிள்ளைகள் பிற்காலத்தில் எவ்வளவோ துன்பங்களை எதிர்த்துப் போராட வேண்டியவர்களாய் உள்ளனர். இப்போது நோவாது வளர்ந்து விட்டால், எதிர்கால வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்க்கமுடியாமல் சோர்ந்துவிடுவர். ஆனால் பெற்ற தாயாதலின் முற்றிலும் இரக்கங் காட்டக்கூடா