பக்கம்:வீடும் விளக்கும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விடும் விளக்கும் தென்பதன்று. மிகுதியாகச் செல்லம் கொடுக்கலாகா தென்பதே. - இரங்குவதும் இயற்கைதான்: அறிவிற் குறைந்த பறவை விலங்கு முதலியனவும் தம் குஞ்சுகளையும் குட்டிகளையும் தீங்கொன்றும் வாராதபடி அருகிருந்து காக்கின்றன. எதிரிகள் அருகில் வருவதாக அறிந்தால் எதிர்த்துத் தாக்குகின்றன. முன்னொரு காலத்தில், திருவாரூர்த் தெருவில் இளவரசனது தேர்க்காலில் அக்ப் பட்டிறந்ததோர் கன்றின் தாய்ப்பசு, அத்துன்பம் பொறாது ஆராய்ச்சி மணி யடித்து, அதே தேர்க் காலில் அவ்வரசிளங் குமரனைப் பழிக்குப்பழி வாங்கிய பின்பே ஆறுதல் அடைந்ததாகக் கூறப்படும் கதை இங்கு போதிய சான்று பகரும். அவைகளே இப்படியென்றால், ஆறறிவுபடைத்த மனிதத் தாய் தன் பிள்ளையை நோகவிடாமையும் இயற்கை யன்றோ? அவள் பிறர் அடிக்கவும் பார்ப்பாளா? தனக்குத்தான் அடிக்க மனம் வருமா? சில தாய்மார்கள் சில சமயங்களில் தப்பித் தவறிப் பிள்ளையை அடித்துவிடுவார்கள் பக்கத்திலிருந்த வர்கள் விலக்கிவிடவில்லை யென்றால் ஏன் விலக்கவில்லை?' என்று பின்பு அவர்கள்மேல் சினங் கொள்வதும் உண்டு. 'கடந்த மாமுனிவரும் கடப்பரோ மக்கள்மேல் காதல்? எனவே, பெற்றோர் பிள்ளைமேல் இரக்கம் காட்ட வேண்டியதுதான். அதுவும் இயற்கைதான். ஆனாலும் அவ்வி க்கம் குறிப்பிட்ட ஓரளவினதாகவே இருக்க வேண்டும்.