பக்கம்:வீடும் விளக்கும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விடும் விளக்கும் "பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்' என்னும் திருக்குறள் தெள்ளிதின் உணர்த்துகின்றது. எனவே, நல்ல திறமை வாய்ந்த பெண்மணிகள் எல்லா வகைச் செல்வ விளக்கங்களாலும் வீடுகளை விளக்கம் பெறச் செய்வார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாம். திருவள்ளுவரின் மனைவி போன்ற நல்ல பெண்மணிகளின் வரலாறே இதற்குத் தக்க சான்றாகும். மாறன் மனைவியார்: இவ்விடத்தில் இளையான்குடி மாற நாயனாரின் மனைவியார் செய்த திறமைப்பாட்டை எடுத்துக் காட்டாது விடின் அவ்வளவு அழகுபடாது. இரவு நேரம். முதல் யாமம் விடை பெற்றது. மாறனாரும் மனைவியாரும் கதவைத் தாளிட்டுப் படுத்துக் கொண்டனர். மழையோ சோ வெனப் பெய்து கொண்டிருக்கின்றது. அந்நெருக்கடியான நேரத்தில் அடியார் ஒருவர் வந்துவிட்டார். கதவு தட்டப்பட்டது. மாறனாரும் மனைவியாரும் எழுந்துவந்து திறந்தனர். அடியாரைக் கண்டனர். நனைந்த 2) 60) L-60) || || மாற்றினர். அவருக்கு அமுது படைக்கவேண்டு மல்லவா? என் செய்வது? கொடிய வறுமை வாட்டு கின்றது. வீட்டிலோ ஒருவித உணவுப் பொருளும் இல்லை. மாறனார் மனைவியை நோக்கினார். செய்வதறியாது திகைத்தார். ஆனால் மனைவியார் வாளா இருந்தார்களா? இல்லை. கணவரை நோக்கி,