பக்கம்:வீடும் விளக்கும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 39 முடியுமோ? ஆவது நல்ல பெண் டிரால் அழிவது தீப்பெண்டிரால். 'இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள் வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய் விடும்' எனப் பெண்ணாகிய ஒளவையார் கூறியுள்ளதும் இது கருதியே. திருவள்ளுவப் பெருந்தகையாரும் இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை" மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்' என இக்கருத்தை வற்புறுத்திப் போந்துளார். கற்பு: மேலும், கற்பு கற்பு என்றால் உரிய கணவனைத் தவிர வேறெவரையும் மனத்தாலும் கினையாத பெருந்தன்மைக்கு மட்டும் பெயரன்று. குடும்பத்தை ஒழுங்குபெற நடத்துதற்கு வேண்டிய நற்குண நற்செய்கைகள் அனைத்திற்கும் கற்பு என்று பெயர் கூறலாம். இத்தகைய கற்பென்னும் கலங்காத் திண்மை ஒரு பெண்ணிடத்தில் இருக்குமேயாயின் அப்பெண்ணைக் காட்டிலும் வீட்டிற்கு வேறென்ன செல்வம் வேண்டும்? அப்பெண்ணே எல்லாவற்றையும் நிறைவுபடுத்துவாள். ஆதலின் அவளே போதும். இக்கருத்தை