பக்கம்:வீடும் விளக்கும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 விடும் விளக்கும் கள். மேலும், உள்ளதைக் கொண்டேயும் நிறைவு படுத்திக் காட்டுவார்கள். நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை வாங்க முடியாத ஒரு சிற்றுரை (குக்கிராமம்) எடுத்துக்கொள் வோம். ஒரு தோற்றம் இரவு ஒன்பது அல்லது பத்து மணியிருக்கலாம். அந்நேரத்தில் தள்ள முடியாத புது விருந்தினர் ஒருவர் வந்துவிட்டதாகவும் வைத்துக் கொள்வோம். அவருக்கு நாலைந்து விதமான கறி சமைத்துப் பரிமாற வேண்டும். வீட்டிலோ ஒருவிதக் காய்கறியும் இல்லை. வெளியில் சென்று வாங்கி வருதற்கும் நேரம் இடம் தரவில்லை. வெளியிலும் கிடைக்காது. என்ன செய்வது? இவ்வித நெருக்கடி யான நேரத்தில் சில அறிவுள்ள பெண்கள் வீட்டிலுள்ள பயறு முதலியன கொண்டே பலவிதம் சமைத்துப் பரிமாறுவார்கள். சில பெண்கள் ஒரு குழம்பு வைப்பதற்கும் வழியறியாமல் திகைப்பார்கள். எனவே, மேற்கூறிய செல்வ வளப்பமெல்லாம், திறமையோடு நற்குண நற்செய்கைகள் நிறைந்த பெண்கள் உள்ள வீடுகளிலேயே நிறைந்திருக்கும். சண்டித்தனம் மண்டிக் கிடக்கும் வீடுகளில் ஒன்றும் இராது. அவ்வீடுகள் புலிகிடக்கும் காடுபோல் பொலி வற்றிருக்கும். அத்திறமையற்ற பெண்கள், வீட்டில் எவ்வளவு செல்வமிருப்பினும் தக்கமுறையில் பயன் ப்டுத்தத் தெரியாமல் விரைவில் அழித்துவிடுவார்கள் என்பது உறுதி. ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்னும் பழமொழியை இங்கு மறக்கவும்