பக்கம்:வீடும் விளக்கும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 37 சென்றதாகக் கூறும் பெரியபுராண வரலாறு ஈண்டு நுணுகி நோக்கி மகிழ்தற்குரிய தொன்றாகும். அன்றியும், உலகம் உரிமைக்குப் போராடும் இக் காலத்திலும் ஆண்கள் மட்டுமே தெய்வ வணக்கம் செய்ய வேண்டும்; பெண்கள் அவ்வித உரிமையின்றி ஆண்கட்கு அடங்கியே கிடக்கவேண்டும் என்று கூறத்தான் முடியுமா? கூறினாலும் பகுத்தறிவு கிறைந்த உலகந்தான் விடுமா? ஆனால், பெண்கள் சிலர், தெய்வ வணக்கம் என்ற பெயரை வைத்துக் கொண்டு பலவித மூடப்பழக்க வழக்கங்கட்கு அடிமைப் பட்டு அல்லல் அடைகின்றனர். அது கூடாது. பகுத் தறிவுக்குப் பங்கம் வராத நிலையில் குறிப்பிட்ட அளவில் நிகழ்த்தப்படவேண்டும். அதுவே சிறப்புற்று வளர்ச்சியளிக்கும். ஆகவே, வீடுகள் பெண்களால் தெய்வ விளக்கும் ஏற்றப்பட்டு விளக்கம் பெறுகின்றன என்பது போதருகின்றது, செல்வ விளக்கம்: மற்றும், பெண்களாலேயே விடு எல்லாப் பொருள் களாலும் விளக்கம் பெறுகின்றது. நல்ல மாண்புடைய பெண்கள் வாழும் வீட்டில் ஒன்றுள்ளது; ஒன்றில்லை என்று கூறுவதற்கிடமிருக்காது, ஏறக்குறைய எல்லாச் செல்வமும் நிறைந்திருக்கும். அவர்கள் எப் பாடு பட்டாயினும் ஒவ்வொரு பொருளாகக் குடும்பத் தில் சேர்த்து வைத்துக்கொள்வார்கள். பின்பும் அவை களைக் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாத்து வைப்பார்