பக்கம்:வீடும் விளக்கும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விடும் விளக்கும் இன்பமாகவும் ஒற்றுமையாகவும் நடைபெறும் என்பதை வற்புறுத்துவதற்காகவே அங்ங்ணம் கூறியுள்ளார். சிறிதும் தெய்வ வணக்கம் கூடாதென்பது திருவள்ளுவர் கருத்தன்று, அவர் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு கருத்தை வற்புறுத்துவதற்காக ஒவ்வொரு விதமாகப் பாடிச் செல்லும் ஒருவித இயல்புடையவர். அதில் தவறொன்றும் இல்லை. புலமை மரபுகளுள் அதுவும் ஒன்றாகும். 'ஊழிற் பெருவலி யாவுள' என்று ஒரு குறளில் கூறிய வள்ளுவர், மற்றொரு குறளில் 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்று கூற மறந்தா ரிலர். ஈண்டும் அதுபோலத்தான். அவர், 'உலகம் கடவுளையே முதன்மையாக உடையது; ஆதலின் அக் கடவுளை மனிதர்கள் கட்டாயம் வணங்கியே தீர வேண் டும்' எனப் பல குறள்களில் வற்புறுத்திப் போந்துளார். அவர் ஈண்டுப் பெண்களைப் பிரித்தே உலகம் என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவரேனும் கூறமுடியுமா? கூறினால்தான் பொருந்துமா? பெண்களைப் பிரித்து விட்டால் உலகம் என ஒன்றுதான் உண்டா? ஆண் பெண்களின் கூட்டுறவே உலகம் அல்லவா? ஆகவே, ஒரு பெண்ணுக்கு முதல் தெய்வம் அவள் கணவனே; ஆயினும் அக்கணவன் நன்மைக்காகத் தானும் அவனால் வணங்கப்படும் தெய்வத்தை அவனுடன் கூடி நின்று வணங்கலாம்; அதில் சிறிதும் தவறில்லை என்ற முடிவுக்கு நாம் அஞ்சாமல் வரலாம். காரைக் காலம்மையார் தம் கணவர் தம்மைக் கைவிட்ட பின்பே அணிகலன்களைக் கைவிட்டுப் பேரின்ப நெறிக்குச்