பக்கம்:வீடும் விளக்கும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 35 வெளியூருக்குச் சென்றிருந்தான். மனைவி தனியே வீட்டில் இருந்தாள். அப்போது வீட்டின் ஒரு பக்கத்தில் பல்லி ஏதோ சொல்லிற்று. அப்போது மனைவி யானவள், நம் கணவர் வெளியே சென்றுள்ளனரே! இங்கு பல்லி ஏதோ சொல்லுகின்றதே, போன இடத்தில் என்ன நடக்கின்றதோ, இது எப்பலனைக் குறிக்கின்றதோ ஒன்றும் புரியவில்லையே; ஏ தெய்வமே! போன கணவர் யாதொரு தீங்காலும் தாக்கப்படாமல் நன்மையுடன் திரும்பும்படியாக அருள் புரிவாயாக' என்று தெய்வத்தை நோக்கி வணங்கி நின்றாளாம். இந்நிகழ்ச்சி "ஓங்கிய நல்லில் ஒருசிறை நிலை இப் பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக் கன்றுபுகு மாலை கின்றோள் எய்தி' என்னும் அகநானுற்று அடிகளில் அழகாக அமைந்து கிடக்கின்றது. மற்றும், ஒரு பெண் தன் கணவன் நன்மைக்காக அவனால் வணங்கப்படும் தெய்வத்தைத் தானும் வணங்குவதற்கு முதல் கற்பு' எனப் பெயரிட் டுள்ளனர் நம் முன்னோர். உண்மை முடிவு: அப்படியென்றால், திருவள்ளுவர் தெய்வம் தொழ வேண்டுவதின்று எனக் கூறியுள்ளாரே! இது எப்படி யாவது? முன்னுக்குப் பின் முரணாய் உள்ளதல்லவா? என்ற கேள்வி எழத்தான் செய்யும். ஆனால், பெண் கட் குக் கணவன்மாரிடத்தில் மிக்க உறுதியும் உள்ளன்பும் வேண்டும்; அப்போதுதான் இல்லறம்