பக்கம்:வீடும் விளக்கும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 விடும் விளக்கும் குறித்துக்கொண்டாள் என வைத்துக் கொள்வோம். அவள் தோழி அவள் மேல் ஐயங் கொள்வாள். அது இயற்கைதானே? பின்பு அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்வதற்காகப் பிறையை வணங்கும்படி அங் நங்கைக்கு அறிவிப்பாள். அங்ங்ணம் வணங்கினால் ஐயம் தீரும். வணங்காவிட்டாலோ, ஓகோ எவனோ ஓர் ஆடவன் இவள் உள்ளத்தைக் கொள்ளை கொண் டுள்ளான் என உறுதி கொள்வாள். இந்நிகழ்ச்சிக்குத் தமிழ்ப் புலவர்கள் பிறைதொழு கென்றல்' எனப் பெயரிட்டுள்ளனர். ஆகவே, பெண்கள் மணமான பின் தெய்வ வணக்கம் செய்யமாட்டார்கள் என்பது இதனால் அறியக் கிடக்கின்றது. மணத்திற்குப் பின் வணக்கம்: அதே சங்க இலக்கியங்களில், மணமான பின்னும் பெண்மணிகள் தெய்வ வணக்கம் செய்வதுண்டு என் பதற்குச் சான்று இல்லாமற் போய்விட்டதா? மணமான பின்னும் சில காரணங்களை முன்னிட்டு வணங்கலாம் என்பதற்குப் போதிய இடம் உள்ளது. கணவன் ஒரு தவறு செய்துவிட்டானாயின், அத்தவறுக்காக அவனுக்கு ஒருவிதத் தீமையும் செய்யக் கூடாதென வேண்டி அவன் நன்மைக்காகத் தெய்வத்தை வணங்குவதுமுண்டு. இங்கிகழ்ச்சியைக் கோவை நூற்களில் குறிப்பிட்டுள்ளனர் புலவர் பெருமக்கள். மேலும், இங்கு அகநானு று என்னும் சங்க நூலில் உள்ள நிகழ்ச்சி யொன்றினைக் குறிப்பிடாமற் போக முடியவில்லை. கணவன் ஒரு வேலையின் கிமித்தம்