பக்கம்:வீடும் விளக்கும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 33 செய்து முடிக்கின்றார்கள். ஆனால் இங்கு தக்கதொரு கேள்விக்கு இடமுண்டு. ஓர் பெண்ணின் கல்லாள் யாதொரு தெய்வத்தையும் தொழாது தன் கண வனையே தொழுவளேயாயின், அவள் பெய்யென்றால் பெய்யும் மழை. இக் கருத்தை 'தெய்வங் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை' எனத் திருவள்ளுவர் திருக்குறள் பறைசாற்றுகின்றது. எனவே, பெண்கட் குத் தெய்வம் கணவனல்லவா? அவர்கள் வேறொரு தெய்வத்தையும் வணங்கலாமா? என்று கேட்கலாமல்லவா? ஆம், அது உண்மையே. ஆராயத் தக்கதும் ஆகும். இக்கருத்து வேறு பல சங்க நூற்களிலும் பெறப்படுகின்றது. சிறிது சுருங்கு நோக்குவோம். பிறை தொழல்: பெண்கள் திருமணமாவதற்குமுன் எல்லாத் தெய்வங்களையும் வணங்குவது வழக்கம். அதிலும் கட்டாயமாக மூன்றாம் பிறை நிலவை வணங்குவது அக்கால இளந்தமிழ் நங்கைமார்களின் இயற்கை வழக்கமாகும். மணமான பின் மூன்றாம் பிறையையும் வணங்கமாட்டார்கள். மணமாகத்தான் வேண்டுமோ? இன்ன ஆடவனையே மணக்கவேண்டும் என்று மனத்திற்குள் உறுதி செய்து கொண்டாலுமே போதும். பிறை வணக்கத்தை அறவே கைவிடுவர். அங்ங்னம் நங்கையொருத்தி நம்பி (ஆண் மகன்) ஒருவனைக்