பக்கம்:வீடும் விளக்கும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வீடும் விளக்கும் வேண்டும்; இன்னின்ன நாட்களில் வாசற்படி விளக்கம் செய்யவேண்டும் எனக் கால நிகழ்ச்சி நிரல் செய்து வைத்திருப்பதும் இதுபற்றியே. அப்படியிருந்தால்தான் வேலையும் முடிவுறும். பெண்கட்கும் எளிதாகத் தெரியும். சில பெண்மணிகள் தாங்கள் நோயுற்றிருந்தாலும் விடுவதில்லை. பொழுது சாய்ந்ததும் மெல்ல எழுந்து விளக்கேற்றுவதையாவது செய்தே தீர்வார்கள். அல்லது வேறுயாரைக் கொண்டாயினும் செய்து வைப்பார்கள். இங்ங்ணம் பெண்மக்கள் உள்ள இடமே தூய்மையாகவும் மங்களமாகவும் இருக்க முடியும். சில கழகங்களிலும் மாநாடுகளிலும் ஆண்கள் நிறைந்த ஒரு பெருங்கூட்டம் ஊர்வலமாக வந்து உள்ளே புகும் போது ஒரு பெண்மணி வந்து ஆலாத்தி யெடுக்க, அப்போது அவ்விடம் மிகவும் பொலிவு பெற்று விளங்குவதை நாம் காண்கின்றோம். எனவே தூய்மையாம் வெளிச்சத்தினையும் மங்களமாம் ஒளியினையும் தந்து வீட்டை விளங்கச் செய்யும் விளக்குப் பெண்மணிகளே என்பது வெள்ளிமலை போல் விளங்குகின்றது அல்லவா? தெய்வ விளக்கம்: மேலும், வீடுகளில் தெய்வ விளக்கம் பெண் மணிகளாலேயே உண்டாக்கப் பெறுகின்றது. சிறப்பு நாட்களில் சில ஆண்கள் கற்பூரத்தையோ நெய்த் திரியையோ கொளுத்துவதொன்றைத்தான் செய்கின் றார்கள். மற்றைய வேலைகளை யெல்லாம் பெண்களே