பக்கம்:வீடும் விளக்கும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 31 மேலும் இன்றைக்கு வீட்டில் என்ன? என்று கேட்டும் தெரிந்துகொள்வதுண்டு. சில ஆண்கள் இன்றைக்கு மெழுகினால்தான் மெழுகினபடியா? இன்னொரு நாளைக்கு மெழுகிக்கொள்ளக்கூடாதா? என்று வைவதுமுண்டு. இதில் ஒரு நுட்பம் அமைந்து கிடப்பதை எடுத்துக் காட்டாமல் விடுவதற்கில்லை. கூர்ந்து நோக்கினால் புலப்பட்டே தீரும். ஒரு பள்ளிக்கூடத்தைத்தான் எடுத்துக்கொள் வோமே. அதில் ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென வைத்துள்ளார்கள். அதிலும் இத்தனை மணக்கு மேல் இத்தனை மணி வரையிலுந்தான் பள்ளிக்கூடம் நடக்கவேண்டும்; இன்னின்ன நேரத்தில் இன்னின்ன பாடங்கள் நடை பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இங்கு ஏன் இப்படிக் கணக்கு வைத்திருக்க வேண்டும்? ஒரு நாளையில் எப்போதாவது எந்தப் பாடமாவது ஐந்து மணி நேரம் நடக்கவேண்டியது தானே யென்று கேட்க முடியாது. அப்படி நடந்தால் பள்ளிக்கூடம் ஒழுங்கு பெறாது. பாடமும் வரம்பு கட வாமலும் தவறாமலும் நடைபெறாது. கினைத்தார் நினைத்தபடி யெல்லாம் சிதற நேரிடும். அதேபோல் என்றைக்காவது மெழுகிக்கொள்ளலாம் என்றால் நாளைக்காகட்டும், மற்றொரு நாளைக்காகட்டும் என்று தள்ளிக்கொண்டே போகும்; குறிப்பிட்ட வேலைகள் குறிப்பிட்ட நேரங்களில் செய்து முடிக்கப் பெறா. நம்முன்னோர்கள் இன்னின்ன நாட்களில் மெழுக