பக்கம்:வீடும் விளக்கும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 வீடும் விளக்கும் என விளக்கமாகக் கூறியிருப்பதும் இத்தகைய வீட்டின் நிலைமையை நோக்கியேயாம். ஆனால், பெண்கள் இல்லாத வீடுகள் சிலவற்றை ஆண்கள் விளக்கமாக வைத்திருக்கின்றார்களே என்று வினவலாம். அங்கேயும் ஒரு வேலைக்காரி இருப்பாள். அல்லது அவ்வேலையை ஆண்களில் ஒருவராவது பெண்கட்குப் பதில் செய்து முடிப்பார். இதுபோல் நடப்பது எங்கேயோ ஒன்று. ஆனால் அவ்வீடு தூய்மையால் ஓரளவு விளக்கமுற்றிருந்தாலும் குழந்தைகளின் கொஞ்சல், விருந்தோம்பல் முதலிய சிறந்த பேறுகளை ஒரு சிறிதும் பெற்றிருக்காது. இதுபற்றி 'உடன்பிறப் பில்லா வுடம்புபாழ் பாழே மடக்கொடி யில்லா மனை' என ஒளவைப் பிராட்டியார் கூறியிருப்பதும் பொருந்திய தொன்றாய் உளது. தூய்மையும் மங்களமும் ஆனால் பெண்கள் இருக்கும் வீடுகளோ இப்படி யிரா. அவர்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அடிக்கடிப் பெருக்கியும், வாரியும், மெழுகியும், விளக்கம் செய்துகொண்டே யிருப்பார்கள். அதிலும் சிறப்பு நாட்களில் சிறிதும் வாளா (சும்மா) இருக்க மாட்டார்கள். சில ஆண்கட்கு அமாவாசை, கார்த்திகை முதலியனவே தெரியா. வீட்டில் பெண்கள் மெழுகுவதைக் கொண்டே உணர்வார்கள்.