பக்கம்:வீடும் விளக்கும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 29 பெண்கள் முன்னேறினால் மேலும் வீடு விளக்கம் பெறும் என்பது உறுதியன்றோ? பெண்ணில்லா வீடு: அது கிற்க, பெண்ணென்னும் விளக்கில்லா விடு களைப் பற்றிச் சிறிது நோக்குவோம். சில வீடுகள் குப் பைக் குவியலால் கிரம்பப் பெற்றிருக்கும். அடிக்கடிப் பூட்டப்பட்டே கிடக்கும். திறந்திருந்தாலும், வீட்டிற்கு உரியவர் நல்லவராயின்றிக் கெட்டவராய் இருப்பாரே யாயின் சொல்லவே வேண்டியதில்லை. கல்லோர் ஒரு வரும் உள்ளே நுழையார். அவ்வீடு ஒரே சந்தை மட மாயும் சூதாட்டக் கொட்டகையுமாகவே காட்சியளிக் கும். விளக்கு வெளிச்சத்திற்குப் பதில் பீடி, சுருட்டு களைப் பற்றவைக்கும் வெளிச்சமே நிறைந்திருக்கும். அடுப்புப் புகைச்சலுக்குப் பதில் இப்புகையே மண்டி வட்டமிடும். விருந்தினர்க்குப் பதில் வேதாளமே கூத் தாடும். பூஞ்செடிக்குப் பதில் வெள்ளெருக்கு முதலி யனவே தழைதோங்கும். சீதேவிக்குப் பதில் மூதேவியே குடியிருப்பாள். குழந்தைகள் விளையாடுவதற்குப் பதில் பாம்பே படமெடுத்தாடும். இவ்வித வீட்டிற் குரியவர்கள் முற்பிறவியில் நீதி மன்றங்களில் பொய்ச்சான்று (சாட்சி) சொல்லியிருப்பார்களோ? நம் ஒளவைப் பிராட்டியார் 'வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே பாதாள மூலி படருமே-மூதேவி சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே மன்றோரம் சொன்னோர் மனை'