பக்கம்:வீடும் விளக்கும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 விடும் விளக்கும் ஆண்களைப் போல் கல்வி முதலியவற்றால் அவர் களும் முன்னேற வேண்டாவா? என்று சினந்து சிலர் கேள்விமேல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக லாம். ஆனால், பெண்கள் முன்னேற்றத்திற்கு யான் ஒரு சிறிதும் தடை கூறுகின்றேன் இல்லை. கூறவும் எனக்கு உரிமை கிடையாது. பெண்கள் முன்னேற்றம் நாட்டிற்கு மிகவும் தேவையானதுஎன்பதில்எள்ளளவும் தடையில்லை. ஆனால் இங்குப் பெண்கட்கு இயற்கை யாகவே அமைந்துகிடக்கும் உண்மை நிலை எடுத்துக் கூறப்பட்டதே தவிர வேறன்று. இதற்குத் தக்கபடி தானே இளமையிலிருந்தே அவர் தம் செயல்களும் உள்ளன. ஆண்பிள்ளைகள் சிறு வயதில் என்னென்னவோ விளையாடுகிறார்கள். பெண்பிள்ளை களோ எனின், சிறு வயதில் மணல்வீடு கட்டுவதையும், மணற் சோறு ஆக்குவதையுமே பெரும்பான்மையான விளையாட்டாகக் கொண்டுள்ளார்கள். இவ்விளை யாட்டிற்குச் சிற்றில் இழைத்தல்' எனப் பெயர் கூறுவர் புலவர் பெருமக்கள். எதிர்காலத்தில் நிகழக் கூடிய இயற்கைப் பழக்க வழக்கங்களே இங்ங்னம் செய்யத் தூண்டுகின்ற ன போலும்? இருப்பினும் தங்களை இயற்கைத் தடைகள் தடுத்த நேரம் போக மீதி நேரங்களில் பெண்களும் ஆண் களைப் போலவே எல்லாத் துறைகளிலும் முன்னேற்ற மடைய முன்வரவேண்டும் என்பதை உணர்வார்களாக! ஆண்களும் அதற்கு உறுதுணையாய் இருக்கவேண்டும் என்பதை மறவாமல் இருப்பார்களாக இங்ங்ணம்