பக்கம்:வீடும் விளக்கும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 27 இயற்கைத் தடைகள்: மற்றும், மனைவி இல்லாள் என்னும் பெயர்கட் கேற்பவே பெண்கள் பெரும்பாலும் வீட்டிலேயே காலங் கழிக்க வேண்டியவர்களா யிருக்கின்றார்கள். ஆண் களைப்போல வெளியில் காலங் கழிக்க முடியாதபடி அவர்கட்குச் சில இயற்கைத் தடைகளும் உள்ளன. கருத்து வேறுபாடுடைய எவரும் இதனை மறுக்க முடியாது. ஆண்களைப் போலவே வெளியில் சென்று சில இன்றியமையாச் செயல்களில் ஈடுபடவேண்டிய கட்டாயம் பெண்மக்கட்கும் சில நேரங்களில் வருவதுண்டு. அப்போது சில பெண்களைத் திங்கள் தீட்டு (மாதவிலக்கு) தடுத்துவிடும். சிலரை கிறைந்த சூல் (கர்ப்பம்) தடை செய்யும். சிலர்க்குப் பொறையு யிர்ப்பு (பிரசவம்) தடையாயிருக்கும். சிலரை அவர்தம் பச்சிளங் குழந்தை நோயுற்று எங்கும் செல்ல முடியாத படி தடை செய்துவிடும். இவ்வளவோடு கின்று விட்டதா? சில பெண்மணிகள் ஊருக்குப் புறப்படு வார்கள், அப்போது தள்ளமுடியாத விருந்தினர்கள் வந்துவிடுவார்கள். அவர்கட்கு உணவு செய்து படைக்கவேண்டிய கட்டாயப் பொறுப்பு ஏற்பட்டு விடும். இவையெல்லாம் ஆண்கட் கில்லாத தடைகள் அல்லவா? இங்ங்ணம் பெண்மணிகள் இயற்கையாகவே வீட்டை விளக்கும் விளக்காக அமைந்துள்ளார்கள். அப்படியானால், இந்த நாகரிக காலத்திலும் பெண் மக்கள் வீட்டிலேயே அடைபட்டுக் கிடக்க வேண்டுமா?