பக்கம்:வீடும் விளக்கும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விடும் விளக்கும் வீட்டிலே காய்கறி வாங்கிவரச் சொன்னார்கள்' என்பார். அதன் உண்மைக் கருத்தை உணராத அங் நண்பர், வீட்டிலே என்றால் நும் தாயார் வாங்கிவரச் சொன்னார்கள் போலும் என்பார். அதற்கவர், இல்லையையா, எங்கள் வீட்டிலே என்கின்றேன். நீ என்னவோ தாயாரா என்று கேட்கின்றாய் என்பார். உடனே நண்பர், ஒகோ! நும் தகப்பனார் வாங்கிவரச் சொன்னாரா? சரிதான் என்பார். அதற்கவர், இல்லை யையா; எங்கள் வீட்டிலே வீட்டிலே என்று அடித்துக் கொள்கின்றேன்; மறுபடியும் தகப்பனாரா என்று கேட்கின்றாய்; வீட்டிலே என்றால் வேறு யாரையா? என் மனைவி வாங்கிவரச் சொன்னாள் என்பார். உடனே நண்பர், ஓ அப்படியா! தாய் தந்தையரை விட மனைவி இருந்தால்தான் உமக்கு வீடு வீடாகத் தெரியும் போலும் எனக் கூறி நகையாடுவார். இந்த நிகழ்ச்சியை நாம் வாழ்க்கையில் பன்முறை கண்டிருப்போம். இங்ங்ணம் பெண்களை வீட்டோடு தொடர்பு படுத்திக் கூறுவதைத் தவிர, ஆண்களையோ வேறு விளக்குக்களையோ கூறுவது யாண்டும் இல்லை; எஞ்ஞான்றும் இல்லை, ஆனால், இங்கென்ன இவ்வளவு எளிய கருத்துக்கள் சில எடுத்துக் காட்டப் படுகின்றனவே என்று எண்ணலாகாது. இந்நூலில் எடுத்துக்கொண்ட கருத்துக்கு ஏற்புடைய நுட்பங்கள் இவற்றில் அமைந்து கிடப்பதையே குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.