பக்கம்:வீடும் விளக்கும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 25 விளக்குகின்றது என்பது காணக் கிடக்கின்றது. அவ்வகைகள் ஒவ்வொன்றினையும் கண்டு செல்வோம். பெயர்ப் பொருத்தம் முதலில் பெண்கட்குள்ள பெயர்ப் பொருத்தமே அவர்க்கும் வீட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பறை சாற்றி உணர்த்துகின்றதென்றால் அதனை ஒருவரும் மறுக்க முடியாது. பெண்கட்கு மனைவி எனவும் இல்லாள் எனவும் பெயருண்டு. மனையென் றாலும் இல் என்றாலும் வீடு என்பது பொருள். ஆகவே மனைவி, இல்லாள் என்னும் சொற்கள் வீட்டிற்கு உரிமை பூண்டவள் என்னும் பொருளைத் தருகின்றன. ஆண்கட்கு மனையான் என்றோ இல்லான் என்றோ பெயரிருப்பதாகத் தெரியவில்லை. மற்றும், சில ஆண்கள், தம் மனைவிமார்களை "எங்கள் வீட்டிலே’ என்னும் சொல்லால் குறிப்பிடு கின்றார்கள். இதனை விளங்க நோக்குவோம். ஓர் ஆண்மகன் தான் சிறுவனாய் இருக்கும்போது எங்கள் விட்டிலே திட்டுவார்கள் எனத் தன் தாய் தந்தையரை விட்டிலே’ என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றான். அவனே தனக்குத் திருமணமாகிவிட்ட பின்பு தன் தாய் தந்தையர் இருக்கும்போதே, எங்கள் வீட்டிலே கேட்டார்கள்' எனத் தன் மனைவியை வீட்டிலே’ என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றான். என்ன விந்தை இது! ஒருவர் தம் மனைவியை மனத்திலே குறிப்பிட்டுக்கொண்டு தம் நண்பரிடம் எங்கள்