பக்கம்:வீடும் விளக்கும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. விடும் விளக்கும் ஏனைய விளக்குக்கள் எல்லாம் விளக்குக்கள் ஆகாவோ எனின், அவ்வளவு சிறந்த விளக்குக்கள் ஆகாவாம். காரணம் ஒன்றன்று; இரண்டல்ல; பல உள்ளன. ஏனைய விளக்குக்கள் பகலில் பயன்படா. இரவில் மட்டுமே பயன்படக் கூடியவைகள். பெண் விளக்கோ என்றும் எபபோதும் பயனளிக்கும். மேலும், ஏனைய விளக்குக்கள் இருட்டை மட்டுமே போக்கக் கூடியவைகள். குப்பை கூளங்களைப் போக்காவாம். இப்பெண் விளக்கோ வீட்டிலுள்ள குப்பை கூளங் களைப் பெருக்கியும், அழுக்குகளைக் கழுவியும், புழுதி படிந்த இடங்களை மெழுகியும் பற்பல விதங்களில் வீட்டை விளக்கப்படுத்தி மங்களமுறச் செய்வதை நாம் காண்கின்றோம். மற்றும் மின்சார விளக்கு எல்லா ஊரிலும் எல்லா வீட்டிலும் இருப்பதில்லை. எண்ணெய் விளக்குக்களையும் இப்பெண் விளக்குத் தான் ஏற்றி உயிர்ப்பிக்கின்றது, இக்கருத்துக்கள் பலவற்றையும் அடக்கியே நம் பெரியோர்கள், திருமண காலத்தில் முதன் முதல் மணப்பெண் வீட்டிற்குள் புகும்போது கையில் விளக்கைத் தந்து அழைத்துக்கொள்கின்றார்கள். இம்முறை ஆண்களுக்குண்டோ? அப்படி ஓர் ஆண் மகன் மாமனார் வீட்டிற்கே குடிபோனாலும் அவன் கையில்விளக்கைத் தந்து உள்ளே அழைத்துக்கொள்ளும் பழக்கத்தை நாம் எங்கும் கண்டிலோம். ஆகவே, இப்பெண் விளக்குப் பற்பல வகைகளிலும் வீட்டை