பக்கம்:வீடும் விளக்கும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 23 விட்டது; வீட்டில் ஒரு விளக்கேற்றி வைத்து விட்டால் என் சுமை நீங்கிவிடும்; இதைத் தவிர வேறு கவலையென ஒன்றுண்டோ?' என்று பதிலளித் தார். அதனைக் கேட்டதும் நாட்டுப்புறத்தானால் வியப்படையாமல் இருக்க முடியுமா? என்ன! இவ்வளவு விளக்குக்கள் எரிகின்றன; இன்னும் ஏதோ விளக்கு வேண்டுமாம்; அவ்விளக்கு இல்லாமையானது ஒரு சுமையாகிக் கவலையைத் தருகின்றதாம்; இதன் உண்மைக் கருத்து யாதோ! என்று பற்பல எண்ண லானான். பெரியவரை நோக்கித் தன் மனம் எண்ணியதை அப்படியே ஒளிக்காமல் அறிவித்தான். அதற்கு அப்பெரியவர் என்ன இது தெரியாதா? விட்டில் விளக்கேற்றி வைத்தல் என்றால் என் மகனுக்கு ஒரு நல்ல பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தல் என்பது பொருள்; அவ்விளக்குத் தானே வீட்டை விளக்கும் முதல் விளக்கு; ஏனைய விளக்கெல்லாம் விளக்காகுமா?; என்று அவனுக்கு நன்கு எடுத்து விளக்கிக் காட்டினார். அவனும் ஒத்துக்கொண்டவனாய் நம் முன்னோர்கள் பெண் கொள்வதற்கு விளக்கேற்றி வைத்தல்' எனப் பெயரிட்டிருப்பது மிகவும் பொருத்தமானதே. ஆகவே வீட்டிற்கு இன்றியமையா விளக்குப் பெண்களே என்று எண்ணி மகிழ்ந்தான். பின் இருவரும் எழுந்து உண வருந்தச் சென்றனர். வீட்டின் விளக்கு எது? மேற்கூறிய சிறு கதையால் வீட்டின் முதல் விளக்குப் பெண்களே என்பது உணரக் கிடக்கின்றது.