பக்கம்:வீடும் விளக்கும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விடும் விளக்கும் பயன்படுதற்காக எண்ணெய் விளக்குக்களும் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. அவ்வீட்டுக் கூடத்தின் நடுவில் ஒரு சாய்வு நாற்காலி போடப்பட்டுள்ளது. அதில் ஒருவர் சாய்ந்து கொண்டிருக்கிறார். வயது அறுபத்தைந்து இருக்க லாம். அவரைப் பார்த்தால் குடும்பத் தலைவராகக் காணப்படுகின்றார். அவரருகில் அவருடைய ஒரே மகன் ஒரு நூலை (புத்தகம்) வைத்துப் புரட்டிக் கொண்டிருக்கின்றான். வயது இருபது இருக்கலாம். நறுங்காளை. தந்தையார் தம் ஒரே மகனைப் பார்த்த வண்ணம் ஆழ்ந்த எண்ணங்களால் அலைக்கப்படு கின்றார். அவ்வமயம் ஒரு நாட்டுப் புறத்தான் உள்ளே நுழைந்தான். அவன் அவர்கட்கு உறவினனாவான். அவன் அங்கு எரியும் மின்சார விளக்குக்களை எல்லாம் நோக்கிப் பெரியதொரு வியப்படைந்தான். பட்டிக்காட்டான் யானை கண்டது போல' என்பது பழமொழியல்லவா? பின்பு மெல்ல அவ்வீட்டுத் தலைவர் இருக்கும் இடத்தை அடைந்தான். அவரும் அவனை அன்புடன் வரவேற்று அருகில் அமர வைத்தார். மேற்கொண்டு சில பேச்சுக்களும் பேசத் தொடங்கினார்கள். வந்தவன் பெரியவரை நோக்கி, 'நூம்மைப் பார்த்தால் யாதோ பெரியதொரு கவலை குடிகொண்டிருப்பதாகத் தோன்றுகின்றதே, அதன் காரணம் என்ன?’ என்று வினவினான். அதற்கவர், ஆமாம் தம்பி என்ன செய்வது? எனக்கும் வயதாய்