பக்கம்:வீடும் விளக்கும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் பகுதி வீட்டின் விளக்கு விட்டிற்கு இருக்கவேண்டிய விளக்கு எது என்று சிறுவர்களைக் கேட்டால் அவர்கள் தங்கள் மனத்திற்கு எட்டியவாறு பல விளக்குக்களைக் குறிப்பிடுவார்கள். ஆனால் வீட்டிற்கு இன்றியமையாத முதல் விளக்கு எது என்பதைப் பின்வரும் சிறுகதை யொன்றின் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளலாம். சிறு கதை: அழகியதொரு மாளிகை. மிகப் பெரியதுமாகும். ஒன்றன்மேல் ஒன்றாக மூன்றடுக்குகள் அடுக்கிக் கட்டப்பட்டுள்ளன. புதியவர் உள்ளே நுழைந்தால் அவ்வீட்டை விட்டு வெளியே வர மனங்கொள்ளார். அவ்வளவு அழகாகக் கட்டப்பட்டுள்ளது அவ்வீடு. ஒரு நாள் முன்னிரவு. மணி எட்டு இருக்கலாம், வீடு முழுமையும் ஞாயிறு (சூரிய) மண்டலத்திலிருந்து இற்றுத் தெறித்தவை போல் மின்சார விளக்குக்கள் ஒளி வீசிக்கொண்டுள்ளன. விளக்குக்கள் என்றால் உயர்தர ஆற்றல் உள்ளவைகள். கூடங்களையும் மாடிகளையும் அழகுபடுத்திக் கொண்டுள்ளன. அவ் விளக்குக்கள் திடீரென கின்றுவிட்டால் அப்போது