பக்கம்:வீடும் விளக்கும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வீடும் விளக்கம் பவர்கள் பெண்கள் என்பது உணரக்கிடக்கின்றது. இதற்கு மாறாக, ஆண்கள் வெளியில் சென்றால், "ஐயோ! வெள்ளிக்கிழமையில் வெளியில் செல்கின்றீர் களே! அங்கேயே தங்கிவிடாமல் விரைவில் திரும்பி விடுவீர்களாக' என்று எந்த ஆண்மகனையும் நோக்கிச் சொல்லும் பழக்கம் நம்நாட்டில் எங்கும் இல்லை, என்றும் இல்லை. மேலும், பெண்கட்குத் தாய்விட்டாரே விளக்கு வாங்கித் தர வேண்டும் என்னும் கட்டாய வழக்கமும் உண்டு. அதன் கருத்துத்தான் என்ன? விளக்கைத் திருமகளாகக் கருதுவது மரபு. ஆதலின் பெண்கள் அந்தத் திருமகளோடு (இலட்சுமிகரத்தோடு) கணவன் வீட்டிற்கு வரவேண்டுமாம். அப்போதுதான் அப்பெண் இருக்கும் இடத்திலும் திருமகள் தங்கி யிருப்பாளாம். வீடும் விளக்கம் பெறுமாம். இதுபோல் மற்றொரு கருத்தும் தமிழர்கட் குண்டு. வெள்ளிக்கிழமையில் பெண்கள் இறக்கக் கூடாது. இறந்து விட்டால் செல்வம் அவர்களோடு போய்விடும் என்றும், இனி அவ்வீடு நீண்ட நாளைக்கு விளக்கம்பெறாது என்றும் கருதிவிடுவார்கள். இன்னும் சில பழக்கங்களும் உண்டு. ஒரு பெண் என்றைக்கிறந்தாலும் சரியே; பிணத்தின் கையில் வெற்றிலை பாக்கு வைத்து அவற்றைக் கணவன் எடுத்துக்கொள்வான். இதன் கருத்து, இறந்த பெண் எல்லா உரிமைகளையும் தன்னுடன் கொண்டு செல்லாமல் இங்கேயே வைத்துவிட்டுப் போவதற்குச்