பக்கம்:வீடும் விளக்கும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 43 செய்யப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. இவ்வளவு செய்தும் மனம் அமைகின்றதா? ஆண்டாண்டுதோறும் அப்பெண்ணுக்குப் பூவாடைக்காரி' எனப்பெயரிட்டுப் புதுப்புடவை வைத்துப் படைத்து அப்பெண்ணை விட்டோடு தொடர்பு படுத்தி வைத்துக்கொண்டே யிருப்பார்கள். தமிழர்களுடைய இப்பழக்க வழக்கங்கள் எல்லாம், பெண்மணிகளால்தாம் எல்லாச் செல்வ வளப்பங்களும் கிரம்பப்பெற்று வீடு விளக்கம்பெறும் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. எனவே வீட்டின் முதல் விளக்குப் பெண்மணிகளே என்பது இதனாலும் நன்கு போதருகின்றதன்றோ? விருந்தோம்பல்: மேலும், மற்றொரு விதத்திலும் பெண்களால் வீடு விளக்கம் பெறுகின்றது. ஒரு வீட்டை எடுத்துக் கொள்வோம். அது மிகப் பெரியதுதான். அழகுடையது தான். பல்வகைக் காட்சிப் பொருள்களாலும் நிரம்பப் பெற்றதுதான். அவ்வீட்டிறகு விருந்தினர் ஒருவர் சென்றார். சென்றவரை வாவென்றழைப் பாரில்லை; நற்சொல் சொல்வாரில்லை; தாகத்திற்கு வெறுங் தண்ணீர் கொடுப்பாரில்லை; உணவுபடைப்பார் இல்லை என்று வைத்துக்கொள்வோம். உடனே அவ்விருந்தினர் சிறிது நேரம் இருந்தபின்பு வீட்டைவிட்டு வெளியேறத் தொடங்குவார். அவ்வீடு மற்றையவற்றால் பொலிவு பெற்றிருந்தாலும் அவர் கண்கட் குச் சிறிதும் விளக்கமில்லாததாகவும் ஒரு பொதுச்சாவடி போலவுமே தோற்றமளிக்கும். ஆடவன்