பக்கம்:வீடும் விளக்கும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை தங்கள் கரங்களில் தவழும் வீடும் விளக்கும் என்னும் இந்நூல் பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் முதல் நூலாகும். பேராசிரியர் அவர்கள் இந்நூலினை முதன் முதலாக 1947-ஆம் ஆண்டும் இதன் இரண்டாம் பதிப்பை 1958-ஆம் ஆண்டும் வெளியிட்டார். நாற்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து இப்போது மூன்றாம் பதிப்பு வெளி வந்துள்ளது. இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் இந்நூலின் முதல் பதிப்பிலேயே இளைஞராக இருந்தபோது தன்னை ஈடுபடுத்திக் கொண்ட புதுச்சேரி பேராசிரியர் க. சச்சிதானந்தன் அவர்கள் ஆவர். இந்நூலுள், பெண்ணின் பெருமையும், பிள்ளைகள் கடமையும், இன்ன பிற குடும்ப விளக்கங்களும் பல பட வகுத்து விரித்து விளக்கப்பட்டுள்ள தாக நூலாசிரியர் முதல் பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார். இந்நூல் அந்நாளிலேயே மாநிலப் பொது நூல் நிலையங்களில் பயன் படுத்துவதற்காக, சென்னை மாநிலக் கல்வித் துறையினரால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்நூல் வெளிவர பொருளுதவி புரிந்த பேராசிரியர் க. சச்சிதானந்தன் அவர்கட்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். பேராசிரியரின் விருப்பத்துக்குச் செயல் வடிவம் தந்து இந்நூலினை வெளிக் கொணர்ந்த புலவர் வ. ஞானப்பிரகாசம் அவர்கட்கும் எங்களின் நனி நன்றி உரித்தாகுக பேராசிரியர் சுந்தர சண்முகனார் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்நூலினை அழகுற அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சுபம் அச்சகத்தாருக்கும் எங்களின் நன்றி. அன்பகள் இந்நூலை தாம் படித்துப் பயன்பெறுவதோடு, தம் உறவினரையும், நண்பர்களையும் படிக்கச் செய்ய வேண்டுகிறோம். தாம் கலந்து கொள்ளும் திருமணங்களில் மணமக்களுக்குப் பரிசாகத் தந்தும் பயனுற வைக்க வேண்டுகிறோம். புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்