பக்கம்:வீடும் விளக்கும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை டாக்டர். அ. சிதம்பரநாதனார், M.A., Ph.D. திரு. வித்துவான். சுந்தர சண்முகனார் அவர்கள் எழுதி யுள்ள 'வீடும் விளக்கும்” என்ற புத்தகத்தில், பண்டைத் தமிழர் வாழ்விற் கண்ட இனிய கருத்துக்கள் பல தேர்ந் தெடுத்து விரும்பிப் படிக்கத் தக்க முறையில் எழுதி வெளி பிடப்பட்டுள்ளன. 'மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்” என்ற சங்ககாலச் சான்றோர் மொழி, பின்னர் மனைக்கு விளக்கம் மடவார்’ என வந்தது; நண்பர் வெளி பீட்டில், அது வீடும் விளக்கும்’ என்ற சொற்றொடர்க்குள் நின்று நம்மை இன்புறுத்துகின்றது. இதன்கண், மகளிர் மனைக்கு விளக்காய் நின்று மாண்பு செய்யும் திறத்தை ஆசிரியா பல்வேறு கூறுகளாக வகுத்து, இனிய கதைகள் வாயிலாகவும், விளக்கவுரை வழியாகவும் விரித்துரைத்துள்ளார். புறநானூறு, குறுந்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய காவியங்களிலும் வரும் பல செய்திகள் இந்நூவிற்கு அணி செய்வனவற்றை எடுத்து அமைத்துள்ளார். இந்நூலாசிரியர் வரைந்துள்ள தமிழ்நடை, மிக்க எளி மையும் இனிமையும் வாய்ந்து பிழையில்லாமல் இருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. கிடைத்தற்கரிய மணி பெற்றால் அதைப் பொன்னிடை வைத்துப் பதித்து அணி செய்வது அறிவுடைய மக்கள் செயல், அது போல நல்ல கருத்துக்களை இனிய எளிய பிழையில்லாத செந்தமிழில் எழுதி வழங்குவது தமிழறிஞர்க்குத் தகுதி. இனிய அழகிய தீவிய தமிழில் இந்நூலை எழுதி வழங்கும் வித்துவான்-சண்முகனார் அவர்கள் மேன்மேலும் இத்தகைய நூல்களை எழுதி, நம் இனிய தமிழகத்துக்குத் தொண்டாற்றிச் சிறப்பெய்துவாராக! இவர்கட்கு வேண்டும் ஆதரவைத் தமிழுலகம் பெரிதும் அளிக்குமென எதிர் பார்க்கின்றேன். அண்ணாமலை நகர். பல்கலைக்கழகம், | இங்ங்னம், 12- 12–1947 அ. சிதம்பரங்ாதன்