பக்கம்:வீடும் விளக்கும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64. விடும் விளக்கும் தனிமகன் இருந்தான். வயதில் சிறியவன். அவன் ஒர்நாள் அவ்வூர்ச் சுடுகாட்டைக் கண்டு அஞ்சி உயிர்விட்டான். அதுபொறாத கோதமை, அவ்வூர்த் தெய்வத்தை விளித்து, “ஏ தெய்வமே என்மகன் உயிர்க்குப் பதிலாக என் உயிரை எடுத்துக்கொண்டு அவனை உயிர் பெறச் செய்வாயேயானால், அவன் என் கண்ணில்லாத கணவனைக் காப்பாற்றுவான்' என்று முறையிட்டுக் கெஞ்சினாள். பயன் கிடைக்க வில்லை. மகன் இறந்தது ஒரு புறம் கிற்க, இனிக் கணவர் நிலை என்ன ஆவது' என்றெண்ணிப் பெரு மூச்சு விட்டாள். அவ்வளவுதான்; அவளும் மகளைப் பின் தொடர்ந்தாள். பெண்டிரால் பெருமிதநடை: இவ்வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால், கோதமை சிறிதும் தன்னலங் கருதாது, பெரிதும் கணவன் நலத்தையே கருதினாள் என்பது கருதப்படு கின்றது. இப்போதும் சில குடும்பங்களில் தம்மைக் கணவர் எவ்வளவு கடுமையாக நடத்தினாலும், அவர் மேல் சிறிதும் வெறுப்பின்றி, உள்ளன்போடு அவர் நலத்திற்கே பாடுபடும் பெண்ணின் நல்லார்களை நாம் காண்கின்றோம். கணவன் தன் மனைவியின் இத்த கைய சிறந்த இயல்பைக் கண்டு தான் செய்த கொடுமைக்குத் தானே நோவதும் வெட்கப்படுவதும் உண்டு. பிணக்கின்றிக் குடும்பம் விளக்கம் பெறுதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். நன்மனைவி வாய்ப்பதும் ஒரு நற்பேறே. புகழ்ச்சிக்குரிய செயல்களைச் செய்யும்