பக்கம்:வீடும் விளக்கும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 63 குழந்தைக்கும் நோய் வந்து விட்டால் மருத்துவம் பார்க்கின்றாள். திடீரென விருந்தினர் வந்துவிட்டால் தன் உணவை அவர்கட் கிட்டுத் தான் பட்டினி கிடக்கின்றாள். அல்லது, அலுப்பைப் பொருட் படுத்தாது நேரங்கெட்ட நேரத்திலும் மற்றொரு முறை சமைத்துப் பரிமாறுகின்றாள். தன் உடம்பு சோர்வுற்றிருந்தாலும் விடுவதில்லை. கணவன் நன்மை யிலேயே கண்ணும் கருத்தும் கொள்கின்றாள். மெல்ல எழுந்து சமையல் முதலிய வேலைகளைச் செய்து முடிக்கின்றாள். ஒரு கற்புடைய பெண் இங்ங்னம் பலவிதத்திலும் தன் கணவற்காகத் தன் வாழ்க்கை யினையே உரிமை (தியாகம்) செய்கின்றாள். 'வளங்கெழு திருநகர்ப் பந்து சிறிதெறியினும் என்னும் அகநானூற்றுப் பாடலாலும் பிறவற்றாலும் இதனை நண்குணரலாம். தாய்வீட்டில் விளையாடி னாலும் உடல் நொந்து போவதாகக் கருதியவள், கணவற்காகப் பெருமுயற்சி யெடுத்துக் கொண்டதாக அப்பாடல்கள் அழகாக அமைந்துள்ளன. உயிர் நீத்தல்: தம் கணவர்க்கு நேரும் துன்பம் பொறாது உயிர் நீக்கும் பெண்மணிகளும் உளர். இதுபற்றிய உருக்கமான வரலாறு ஒன்று, மணிமேகலை என்னும் நூலில் அவலச்சுவை ததும்ப அழகாக அமைக்கப் பட்டுளது. பண்டொரு காலம் காவிரிப் பூம்பட்டினத்தில் கோதமை என்னும் பெண்ணொருத்தி தன் கண்ணில்லாக் கணவனொடு வாழ்க்கை நடாத்தி வந்தாள். அவர்கட் குச் சார்ங்கலன் என்னும் செல்வத்