பக்கம்:வீடும் விளக்கும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 73 பக்கத்தில் ஐந்து வயதுப் பையனும் சாய்ந்து கொண் டிருந்தார்கள். அப்பெண் தன் கைக்குழந்தையைப் பார்த்துச் சிரிக்கின்றாள். கொஞ்சிக் கொஞ்சிப் பேசு கின்றாள். உச்சிமோந்து முத்தம் கொடுக்கின்றாள். பககத்திலிருக்கும் பிள்ளைகளை அனைத்துக் கொள் கின்றாள். அவர்கட்குக் கட்டு சோற்றை அவிழ்த்து ஊட்டுகின்றாள். அவர்கள் உண்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைகின்றாள். அவளிடத்தில் பெரிய பேறு பெற்றாற் போன்றதோர் இறுமாப்பும் காணப்படு கின்றது. இங்ங்னமாகத் தாயும் பிள்ளைகளும் புகை வண்டியில் செல்வதையும் மறந்து, இப்பேருவகைப் பெரு வாழ்விலேயே திளைத்திருந்தார்கள். இவர்கள் பக்கத்தில் வேற்றுக்கிழவி யொருத்தியும் அமர்ந்திருந்தாள். அக்கிழவி அவ்வேழைப் பெண்ணைப் பார்த்து, எல்லாம் உன் பிள்ளைகள் தாமா? என்று ஒரு கேள்வியும் போட்டாள். அதற்கப்பெண் ஆமாம் பாட்டீ மூன்றும் என் பிள்ளைகளே. ஏதோ கடவுள் கொடுத்தார்' என்று மகிழ்ச்சியும் இறு மாப்பும் தோன்றப் பதில் கூறினாள். பின்பு கிழவி முதலில் கூறிய செல்வப் பெண்ணை நோக்கினாள். மெல்ல, எந்த ஊருக்குச் செல்கின்றா யம்மா?' என்று கேட்டாள். அப்பெண் இராமேசுவரத் திற்குச் செல்கின்றோம் என்று விடை பகர்ந்தாள். மேலும் கிழவி, அப்படியா! சரிதான். உங்களைப் பார்த்தால் பெரிய பணக்காரராய்த் தோன்றுகின்றது. ஆனால் உள்ளத்தில் ஒரு பெருங் கவலை குடியிருப்ப